ZTE Blade A5 2020 ஸ்மார்ட்போன் சிங்கர் விற்பனை நிலையங்களில் | தினகரன் வாரமஞ்சரி

ZTE Blade A5 2020 ஸ்மார்ட்போன் சிங்கர் விற்பனை நிலையங்களில்

ZTE நிறுவனத்தினால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியான ZTE Blade A5 2020இப்போது இலங்கையில் உள்ள சிங்கர் காட்சியறைகளில் கிடைக்கப்பெறுகின்றது. 2ஜிபி RAM கொண்ட 6,088அங்குல display கொண்ட இந்த கையடக்கத் தொலைபேசியானது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த மற்றும் தனித்துவமான அனுபவத்தை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த கையடக்கத் தொலைபேசி வாடிக்கையாளரை ஈர்க்கும் வகையில் கடும் பச்சை, நீலம் மற்றும் கறுப்பு ஆகிய மிகவும் கவர்ச்சிகரமான நிறங்களில் கிடைக்கிறது. அது மட்டுமல்லாது, இலங்கையின் சந்தையில் காணப்படும் ஏனைய ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளை விட வாடிக்கையாளர்களை ஈர்க்கக்கூடிய பல்வேறு அம்சங்களையும் கொண்டுள்ளது.

மேலும், தள்ளுபடி விலை வரம்பில் பிரயோஜனமான மற்றும் கவர்ச்சிகரமான ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியை கொள்வனவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ZTE Blade A5 2020ஆனது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும் என்பது உறுதி.

ZTE Blade A5 2020 தொலைபேசியானது 2GB RAM க்கு மேலதிகமாக 32GB ROM மற்றும் 3200mAh பேட்டரியுடன் கிடைக்கப்பெறுகின்றது. மேலும், Android R Go இயங்குதளம் கொண்ட இந்த கையடக்க தொலைபேசியில் 1.6 Octa-Core CPU ஒன்றும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பின்புற கேமரா அமைப்பில் இரண்டு 13 MP மற்றும் 8MP கேமராக்கள் இணைக்கப்பட்டுள்ளதோடு முன்பக்க (செல்பி) கேமரா 8MP அளவிலான தெளிவான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வழங்கும் திறன் கொண்டது. இது 32 ஜிபி உள் சேமிப்பிடத்தைக் கொண்டுள்ளமையால் வீடியோ சேமிப்பகத்தைத் தனிப்பயனாக்க உங்களை அனுமதிக்கிறது.

Comments