ஆஸியுடனான 3 ஆவது 20க்கு20 ஆட்டத்தில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி | தினகரன் வாரமஞ்சரி

ஆஸியுடனான 3 ஆவது 20க்கு20 ஆட்டத்தில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி

தசுன் சானக்கவின்  அபார ஆட்டத்துடன் இலங்கை அணி ஒரு பந்து மீதமிருக்க  4விக்கெட்டுக்களால் திரில் வெற்றி பெற்று தொடரை 2--1என இழந்தது.

177ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என  பதிலெடுத்தாடிய இலங்கை அணிக்கு ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக தனுஷ்க குணதிலக்க மற்றும் பெத்தும் நிசங்க ஆகியோர் களமிறங்கினர்.நன்றாக ஆடிய தனுஷ்க குணதிலக்க 15ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார்.பின்னர் நிசங்கவுடன் இணைந்தார் சரித் அசலங்க இருவரும் நிதானமாகவும் அதிரடியாகவும் ஆடிய சரித் அசலங்க 26ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை ஆட்டமிழந்து சென்றார்.பின்னர் நிசங்கவுடன் இணைந்தார் பானுக்க ராஜபக்‌ஷ.

ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய பெத்தும் நிசங்க நிதானமாக ஆடி ஓட்டங்கள் குவித்த நிலையில் 27ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார்.பானுக்கவுடன் இணைந்தார் விக்கெட் காப்பாளர் குசல் மென்டிஸ். பானுக்க ராஜபக்‌ஷ இலங்கை அணிக்கு நம்பிக்கை தரும் வகையில் ஆடிய வேளை 17ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார்.பின்னர் மென்டிஸுன் இணைந்தார் அணியின் தலைவர் தசுன் சானக்க.மென்டிஸ் 7ஓட்டங்கள் பெற்ற நிலையில்  ஆட்டமிழந்தார்.இலங்கை அணியின் மத்திய வரிசை வீரர்கள் துடுப்பாட்டத்தில் சிறப்பாக ஆட தவறியமை இங்கு குறிப்பிடத்தக்கது.அத்துடன் சானக்கவுடன்  இணைந்தார் வனிந்து ஹசரங்க.வனிந்து ஹசரங்க 8ஓட்டங்கள் பெற்ற நிலையில் ஆட்டமிழந்து சென்றார்.பின்னர் அணியின் தலைவருடன் இணைந்தார்.சாமிக்க கருணாரத்ன .தசுன் சானக்க 54ஓட்டங்களையும் சாமிக்க கருணாரத்ன 14ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற இலங்கை அணி 19.5ஓவர்கள் நிறைவில் 6விக்கெட்டுக்களை இழந்து 177ஓட்டங்களைப் பெற்று பெற்றி பெற்றது.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக ஹேசல்வூட்,ஸ்ரொய்ன்ஸ் தலா இரு விக்கெட்டுக்களை யும் ஜேய் றிச்சர்ட்சன்,அஸ்டன் அகார் தலா ஒரு விக்கெட்டையும் பதம் பார்த்தனர்.

இரு அணிகளும்  மோதிய மூன்றாவதும் இறுதியுமான 20க்கு 20போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் நேற்று இடம்பெற்றது.

அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக ஆரோன் பின்ஞ்ச் -டேவிட் வோர்னர் ஆகியோர் களமிறங்கினர்.இருவரும் நிதானமாகவும் அதிரடியாகவும் ஆடி அணியின் தலைவர் பின்ஞ் 29ஓட்டங்கள் எடுத்திருந்த போது தீக்‌ஷனவின் பந்தில் ஆட்டமிழந்தார்.பின்னர் வோர்னருடன் இணைந்தார் கிளேன் மெக்‌ஷ்வெல் இருவரும் நன்றாக ஆடிய வேளை மெக்‌ஷ்வெல் 16ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க பின்னர் ஆரம்பத்துப்பாட்ட வீரராக சிறப்பாக ஆடிய டேவிட் வோனர் 39ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க பின்னர் இன்றைய ஆட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட ஜோஸ் இங்லிஸ் ஓட்டம் எதுவும் பெறாமல் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்து சென்றார்.பின்னர் இணைந்தார்கள் ஸ்டிவ் ஸ்மித் மற்றும் மார்கஸ் ஸ்ரொன்ஸ்.மார்கஸ் ஸ்ரொன்ஸ் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த போது 38ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார்.பின்னர் ஸ்மித்துடன் இணைந்தார் விக்கெட் காப்பாளர் மெத்திவ் வாட் 13ஓட்டங்களையும் ஸ்மித் 37ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக மஹீஷ் தீக்‌ஷன இரண்டு விக்கெட்டையும் ஹசரங்க,பிரவீன் ஜயவிக்ரம தலா ஒரு விக்கெட்டையும் பதம் பார்த்தனர்.

அவுஸ்திரேலிய அணி 20ஓவர்கள் முடிவில் 5விக்கெட்டுக்களை இழந்து 176ஓட்டங்களை பெற்று இலங்கைக்கு சவாலான ஓட்ட இலக்கை நிர்ணயித்தது.

அத்துடன் நுவான் துஷாரவுக்கு பதிலாக இலங்கை அணி சார்பாக பிரவீன் ஜயவிக்ரம அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய அணி சார்பாக அவ்வணியின் சகல துறைவீரர் மிச்சல் மாஷ் காயம் காரணமாக ஆடமாட்டார் என அறிவித்துள்ள அதேநேரம் அவர் 5ஒரு நாள் சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார் என அறிவித்துள்ளது.ஆனால் அவர் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.அத்துடன் அவருக்கு பதிலாக ஜோஷ் இங்லிங்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கை: 1பெத்தும் நிஸ்ஸங்க, 2தனுஷ்க குணதிலக, 3சரித் அசலங்க, 4குசால் மெண்டிஸ் (விக்கெட் காப்பாளர்), 5பானுக ராஜபக்‌ஷ, 6தசுன் ஷனக (தலைவர்), 7வனிந்து ஹசரங்க, 8சாமிக கருணாரத்ன, 9துஷ்மந்த சமீர, 10மஹேஷ் தீக்ஷன, 11பிரவீன் ஜயவிக்ரம

அவுஸ்திரேலியா: 1ஆரோன் ஃபின்ச் (தலைவர்), 2டேவிட் வோர்னர், 3ஜோஷ் இங்லிஸ், 4கிளென் மேக்ஸ்வெல், 5ஸ்டீவன் ஸ்மித், 6மார்கஸ் ஸ்டோய்னிஸ், 7மேத்யூ வேட் (விக்கெட் காப்பாளர்), 8அஷ்டன் அகர், 9ஜே ரிச்சர்ட்சன், 10கேன் ரிச்சர்ட்சன், 11ஜோஷ் ஹேசில்வுட் இரு அணிகளும் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி 14ம் திகதி இதே மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

போட்டியின் நாயகனாக அணியின் தலைவர் தசுன் சானக்க தெரிவானார்.

Comments