யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள்; கொடுப்பனவு இன்றி பணியாற்ற தீர்மானம் | தினகரன் வாரமஞ்சரி

யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள்; கொடுப்பனவு இன்றி பணியாற்ற தீர்மானம்

யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் எவ்வித கொடுப்பனவும் இல்லாமல் பணியாற்றுவது தொடர்பில் எடுத்துக்காட்டும் விசேட தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது. யாழ் மாநகர சபையின் கடந்த அமர்விலேயே இந்த விசேட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

நாட்டில் காணப்படும் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் உள்ளூராட்சி சபையின் உறுப்பினர்களுக்கு கொடுப்பனவு வழங்காததால் சபை கலைக்கப்படுகின்ற சூழல் ஏற்படுமானால் யாழ். மாநகரசபை உறுப்பினர்கள் எவ்வித கொடுப்பனவுமில்லாமல் பணியாற்றுவது என எடுத்துக்காட்டும் வகையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது.யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணனால் கொண்டுவரப்பட்ட இந்த பிரேரணைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களான தர்சானந்த் மற்றும் நித்தியானந்தன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்த போதும் ஏனைய உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

யாழ்.விசேட நிருபர்

Comments