கடலில் பலத்த காற்று,கடல் சீற்றம்; மீனவர்கள் மற்றும் கடற்படைக்கு எச்சரிப்பு | தினகரன் வாரமஞ்சரி

கடலில் பலத்த காற்று,கடல் சீற்றம்; மீனவர்கள் மற்றும் கடற்படைக்கு எச்சரிப்பு

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும் நாட்டின் தென்பகுதியிலும் நிலவும் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

இதன் காரணமாக மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

காற்று மேற்கிலிருந்து தென்மேற்கு திசையில் வீசும் மற்றும் காற்றின் வேகம் மணிக்கு (30-40) கிலோமீற்றர் கொழும்பு அம்பாந்தோட்டையிலிருந்து காலி ஊடாக கடற்பரப்புகளுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணிக்கு (60-70) கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம்.  

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணிக்கு (50-60) கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம்.  

கொழும்பு அம்பாந்தோட்டையிலிருந்து காலி ஊடாக கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும்.  

புத்தளத்திலிருந்து கொழும்பு வரையான மற்றும் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புக்கள் கொந்தளிப்புடன் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புக்கள் மிதமானதாக காணப்படும்.  

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் (சுமார் 2.5 – 3.0மீ) அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகின்றது.  

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அண்மித்த கரையோர கடற்பரப்புகளில் அலைகள் எழும்பும் சாத்தியம் காணப்படுகின்றது.  

எனவே, கொழும்பிலிருந்து காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளுக்கு அடுத்த 24மணித்தியாலங்களுக்குள் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.   

Comments