கந்தக்காடு கைதி கொலை; நான்கு சார்ஜன்ட்கள் கைது | தினகரன் வாரமஞ்சரி

கந்தக்காடு கைதி கொலை; நான்கு சார்ஜன்ட்கள் கைது

கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்த புனர்வாழ்வு கைதியின் மரணம் தொடர்பில் இராணுவம் மற்றும் விமானப்படையைச் சேர்ந்த நான்கு சார்ஜன்ட்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நான்கு அதிகாரிகளும் புனர்வாழ்வு மையத்தில் ஆலோசகர்களாக பணிபுரிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

புனர்வாழ்வு நிலையத்தின் ஆலோசகர்களின் வாக்குமூலங்களைப் பதிவுசெய்வதற்காக வெலிகந்த பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டதை அடுத்து 35மற்றும் 39வயதுக்குட்பட்ட குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கந்தக்காடு முகாமில் தடுப்பில் இருந்த ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் இராணுவத்தில் இருவரும், விமானப்படை அலுவலர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.  கந்தக்காடு முகாமில் கடந்தவாரம் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், 500க்கும் மேற்பட்டோர் தப்பியோடியிருந்தனர். 

இந்நிலையில், 667 பேர் மீளவும் கைதுசெய்யப்பட்டதுடன் 57 பேர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருகின்றனர்.  

Comments