லாப் GAS அதிக விலைக்கு விற்கப்படுவதாக தகவல் | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

லாப் GAS அதிக விலைக்கு விற்கப்படுவதாக தகவல்

லாப் சமையல் எரிவாயுக்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் தொடர்பில் உடனடியாக அறியத் தருமாறு லாப் நிறுவனம் அறிவித்துள்ளது.  இது தொடர்பாக லாப் எரிபொருள் நிறுவனம் விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  லாப் சமையல் எரிவாயுக்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் சில்லறை விலையைவிட அதிக விலைக்கு லாப் காஸ் சிலிண்டர் விற்பனை செய்து, நுகர்வோரை அழுத்தங்களுக்கு உள்ளாக்கும் வகையில் முறையற்ற இலாபம் உழைப்பது தொடர்பான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

இவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிக விலைக்கு லாப் சமையல் எரிவாயு விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் நிறுவனத்தின் நுகர்வோர் சேவை பிரிவின் 1345என்ற துரித இலக்கத்துக்கு அறியத்தரவும். 

12.5 லாப் சமையல் எரிவாயு ஒன்றின் சில்லறை விலை 6,850 ரூபாவாகும் என்றும் தெரிவித்துள்ளது.  

Comments