தரணியின் தாரகை தந்தையே! | தினகரன் வாரமஞ்சரி

தரணியின் தாரகை தந்தையே!

பதினெட்டு வயது இளைஞன் போல, அவர் உடற் கட்டமைப்பு தூரப்பார்வைக்குக் காட்சியளித்தாலும் அவரின் சவரம் செய்யாத முகமும் கரடுமுரடான கன்னங்களும் அவரது வயதை உலகத்திற்கு அறிவித்துவிடும். அவரின் புயத்தில் உழைப்பு மின்னுகின்றது. சிரித்த முகம், தும்பு முட்டாசு சாயல் தாடி, அன்றைய உலகத்தை இன்றைய உலகத்திற்கு புடம் போடும் புயங்கள், கறுப்பும் லேசாக வெள்ளையூம் சேர்ந்த முடி அவரது சென்னி மீது இடையிடையே படர்ந்ததைப் போல படம் காட்டியது - இத்தனையும் ஒன்றுசேர ஒரு சோபையைப் பெரியசாமியார'உலகத்திற்கு கொடுத்தார். இருந்தும் ஏதோவொரு ஏக்கம்? அவரில் பளிச்சிடுகிறது. நவீன வாகனங்கள் சுற்று வட்ட வீதியைக் கடக்க தன்னியக்க சமிக்ஞைக்காக காத்து நின்றன. 

பெரியசாமியார் பல வருடங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாண நகருக்கு வந்துள்ளார். எழுபது வயதைத் தாண்டிவிட்டதால், இருபது கிலோமீற்றருக்குள்ளேயே மிதி வண்டியில் பயணத்தை மேற்கொள்வதற்குச் சரீரம் இடம் கொடுத்தது. 

சிறிய வயதில் நூறு, இருநூறு கிலோமீற்றர் தூரம் மிதிவண்டி மிதித்து பயணம் மேற்கொண்ட பாதங்கள் இப்போது தூரப்பயணம் என்றதும் பேருந்தை நாடுகின்றன. 

பெரியசாமியார் யாழ் நகரில் வந்து இறங்கியதும் மாடமாளிகைகளைப் பார்த்து அவரின் கண்கள் திகைத்தன. மூன்று மகன்மாரை உலகிற்கு கொடுத்த இவர் அந்திம காலத்தில் ராஜாவாக வாழ வேண்டியவர் இருந்தும் உழைப்பின் மீதும் மிதி வண்டியின் மீதும் கொண்ட வாஞ்சை அவரை ஆரோக்கியமானவராக இந்த பூமியில் உலாவர வைத்துள்ளது. 

சுற்று வட்ட வீதியில் சமிக்ஞைக்காக காத்து நின்ற வாகனங்கள் சமிக்ஞை கிடைத்ததும் நீh; குழாய்களிலிருந்து வழியூம் நீh; போல இரண்டு பக்க வீதிகளிலும் பறந்தன. இதைப் பாh;த்தஇ பொpயசாமியாருக்கு அந்தக் கால ஞாபகங்கள் வானத்தில் மேக கூட்தத்திடையே ஓடும் மதி போல நிழலாடுகின்றன. 

02 

ஐம்பது வருடங்களுக்கு முன் திருமண வாழ்வில் இணைந்த பெரியசாமியார் முதல் தடவையாக அவருடைய தந்தையின் சொந்த தோட்ட உழைப்பில் வாங்கிய மிதி வண்டியில் தனது அன்பு மனைவியை அழைத்துக் கொண்டு பொங்கல் விழாவுக்குப் புறப்பட ஆயித்தமானார். 

“தம்பி தங்கராசு இந்த சைக்கிள் உன்ர அப்பா உனக்கு பதினாறு வயசில் வாங்கித் தந்த சொத்து. மருமகள முதல் முதல் ஏத்திக் கொண்டு போகப் போறாய். என்னை ஒரு தடவை ஆஸ்பத்திரிக்கு ஏற்றிக்கொண்டுபோய் விழுத்தி இரண்டு பேரும் பத்து நாள் பத்து போட்டுக் கொண்டு திரிஞ்சது தெரியுந்தானே” என பெரியசாமியாருக்கு அவரின் தாயார் அறிவுரைப் புகட்டினார். 

“சும்மா போ அம்மா என்ர மானத்தை வாங்காத அது அப்ப சின்ன வயசில” என்ற வாறு தனது புது மனைவியைப் பார்த்துஇ சிறிது வெட்கம் கலந்த நளினத்துடன் புன்னகைத்து, மிதிவண்டியில் முன்பக்க ‘பாரில்’ முதற் தடவையாக தனது குடும்ப குத்து விளக்கை சுடர் அணையா வண்ணம் ஏற்றினார். 

“அம்மா அப்படிதான் சும்மா சின்ன வயசில் நடந்ததைப் பற்றியே தான் கதைக்கும்” என்று தனது மிதி வண்டியின் இருக்கையில் அமர்ந்து வலக்கையால் மிதிவண்டியின் வலக்கையைப் பிடித்தவாறு இடக்காலை நிலத்தில் ஊன்றி வலக்காலை மிதிவண்டியின் வலப்பக்க மிதியின் மேல் வைத்து, திலகத்தின் காதுகளுக்கு மட்டும் கூறியது, அருகில் இவர்களின் விளையாட்டுக்களைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த பெரியசாமியாரின் தாயாரின் காதுகளுக்கு எட்டிவிட்டது. 

“ஏய் நீ எனக்கு அப்பவும் சின்னப்பிள்ளைத் தான் இப்பவும் சின்னப்பிள்ளைத் தான் இப்ப கூட நீ ஒன்றை மறந்து போய் வெளிக்கிட்டிட்டாய். காத்து ‘பம்மை’ இந்தா கொண்டு வந்திருக்கன். சீட்டுக்குக் கீழ கட்டிக்கொண்டு போ இஞ்சயிருந்து பத்து கட்ட தூரம் போற, வாற இடத்தில் காத்து கீத்து போச்செண்டா அதோ கெதி தான் என்ன? என்ன புதிய பழக்கம் ஒவ்வொரு நாளும் கொண்டுதானே போவாய் இண்டைக்கு மட்டும் புதுசா” என்று கத்திக் கொண்டு கைகளில் ‘காற்று பம்பி’யூடன் ஓடிவந்தாள். 

“என்ன அம்மா, எங்கள போகவிடமாட்டாயா?. மனிசியையும் ஏத்திக் கொண்டு ‘பம்மை’ கட்டிக்கிட்டுப் போனா பாக்கிற ஆக்கள் என்ன நினைப்பாங்க? இண்டைக்கு வேணாம் கொண்டே வையுங்கோ அம்மா” 

“இல்லை காத்து போனா உனக்குப் பரவாயில்லை அந்த பிள்ளை பாவம்” 

“இரண்டு ‘டய’ரும் ‘டியூப்பும் புதுசா போட்டதுதானே” 

தாயின் முகம், மகனின் பொறுப்பற்ற வார்த்தைகளைக் கேட்டதும் சற்று வாடியது. 

“சரி சரி... போயிட்டு வா. மருமகள் ஏதும் நினைக்க போகுது” என்றவாறு திருப்தியற்ற மனத்துடன் மெதுவாக வீட்டின் பக்கம் திரும்பினாள். 

பொங்கல் விழா அதிகாலையில் படையலுடன் சூரியனுக்கு நன்றி தெரிவித்து, வெகு கோலாகலமாக ஆரம்பித்து,  விளையாட்டுக்கள், பாட்டு,நடனம், நாடகம்,  சங்கீத கதிரை,  கூத்து, இசைநாடகம் என பல நிகழ்ச்சிகளுடன் இனிதே இரவு ஒன்பது மணிக்கு நிறைவு பெற்றது. சனக் கூட்டத்திற்குள் களைத்துப் போன புதுத் தம்பதிகள் மிதிவண்டியில் வீடு நோக்கிப் பயணமாகினர் கும்மிருட்டு மிதிவண்டி ‘டைனமோ’வின் மங்கிய ஒளியும் முகிற் கூட்டத்தை விட்டு இடையிடையே வெளியே வரும் இலேசான நிலவொளியூம் அவர்களுக்குப் பாதையைக் காட்டின. 

வீட்டுக்குச் செல்வதற்கு இன்னும் அரைவாசிக்கு மேற்பட்ட தூரம் இருக்கும்போது மிதிவண்டியின் உயரம் திடீரென்று முன் பக்கம் சற்று குறைந்தது. மிதிவண்டி அந்த இடத்தை விட்டு அசையவில்லை. மிதிவண்டி நின்றது. பத்து நிமிடம் புதுத் தம்பதிகள் நின்றிருப்பார்கள். 

ஆயிரம் மீற்றர்  தூரத்தில் தீப்பந்தங்களின் ஒளிக்கு மத்தியில் மரண ஓலங்களும் மக்களின் சப்தங்களும் மாங்குள கிராமத்தின் காதுகளையே கிழிக்கின்றன. சனக்கூட்டத்துக்குள் புகுந்த பெரியசாமியாரின் தாயார்   மருமகளையும் மகனையும் அங்குமிங்கும் தேடி அலையவிடுகின்றாள். சனக்கூட்டத்தின் மத்தியில் இலைகுலைகளினாலும் வெள்ளைத்துணியாலும் மூடப்பட்ட இரண்டு பிணங்கள் கிடந்தன. அருகில் புதிய மிதிவண்டியும் பின் சக்கரம் சுற்றியவாறு கிடந்தது. இவற்றைக்கண்ட கெங்கைக்கு வார்த்தைகள் வெளிவரவில்லை. தூரத்தே இருந்தே மிதிவண்டியைக் கண்ட அவள் அது அவர்களுடையது அல்ல என்பதை உறுதி செய்து கொண்டாள். இருந்தும் மூடிக்கிடக்கும் பிணங்களைத் திறந்து பார்க்கும் மட்டும் அவளது  இதயம் வேகமாகத்  துடித்தது. திறந்து பார்த்தாள் சந்தேககம் நீங்கியது. அவை அவர்களது அல்ல. அந்த பிணங்களின் மேல் பறித்து போடப்பட்ட இலைகுலைகள் மனிதரால் போடப்பட்டவை அல்ல.  அந்த வனத்தில் மதம் பிடித்துத் திரியும்   யானையால் போடப்பட்டவை. 

வலக்கையில் தீப்பந்தத்துடன்  வெளியை நோக்கி ஓடுகின்றாள். கூப்பிடு தூரத்தில் இரண்டு ஜீவன்கள் உரையாடிக்கொண்டு நின்றன. அவர்கள்தானோ என்று கெங்கையின் மனம் ஊகித்தது.  அருகே சென்று உறுதிப்படுத்திக் கொண்டது. அது அவர்கள்தான் என்று.  இரவு  நேரத்திலும் வியர்வை  சிந்த ஓடிவந்த, கெங்கை அவர்களை உற்றுநோக்கி மகன்,  மருமகள் தான் என்பதை சிந்தையில் ஏற்றிக் கொண்டாள். 

“அம்மா நீ சொன்ன மாதிரி ‘பம்மை’ கொண்டுவந்திருக்கலாம்’ என்று பெரியசாமியாரின் இதழ்கள் அசைந்தன. 

“கொண்டு வராதது நல்லது” 

“என்ன அம்மா? வெளிக்கிடக்கே அப்படி சொன்னீங்க இப்ப இப்படி சொல்றீங்க.” 

“அப்ப அப்படிதான், இப்ப இப்படித்தான் சொல்லுவன்” 

தாய், மகனின் அன்புச் சண்டையைப் பார்த்து, திலகத்தின் உதடுகள் மௌன புன்னகை பூத்தது. கெங்கை தனது இடக்கையிலிருந்த காற்று ‘பம்மை’ மகனிடம் கொடுத்து,  

 “காத்தை கெதியா அடி போவம் யானை இரண்டு பேருக்கு கொன்று  போட்டிருச்சி. பாவம் திலகத்தற்கு இது ஒன்றும் தெரியாது.” குசுகுசுவென மகனின் காதுகளிள் பொழிந்தாள். 

மகன் விடயத்தை புரிந்து கொண்டு “சரி அம்மா போவம்,  பாத்தியா  அம்மா ‘பம்மை’ கொண்டு வராததினால் தப்பினம்” என்றவாறு பாய்ந்து பாய்ந்து மிதிவண்டியின் முன் சக்கரத்திற்குக் காற்று நிரப்பினார். மூவரையும் சுமந்தவாறு மிதிவண்டி வீடு நோக்கி விரைந்தது. 

பெரியசாமியாரின் தாயாரும் தந்தையாரும் இறந்து பத்து வருடங்களாகிவிட்டன. மூன்று பிள்ளைகளும் வளர்ந்து  பட்டங்களும் பெற்றனர்.  மூத்தவன் ஆசிரியராகவும் இடைப்பட்டவன் முகாமைத்துவ உதவியாளராகவும் கடைக்குட்டி தனியார்துறையில் ஆசிரியராகவும் பணியாற்றினர்.  

பெரியசாமியார் பிள்ளைகளை ஆளாக்கிய சோகக் கதைகளை இவரின் மிதிவண்டி விடியவிடியக் கூறும். வன்னிப்பிராந்தியம் உள்நாட்டு யுத்தகாலத்தில் எதிர் கொண்ட சவால்கள் ஏராளம். அதற்குள் மிதிவண்டி சோதனைகள் மத்தியில் செய்த சாதனைகள் அதிகம்.  

யுத்த காலத்தில் 

பொருளாதார தடையின் உச்சக்கட்டமாக மிதிவண்டிகளின் ‘டியூப்பு’கள் தடைசெய்யப்பட்டன. இவ்வேளை தனது அடுத்தடுத்து பிறந்த ஆசைக் குழந்தைகளையும் வெளியுலகம் அறியாத அன்பு மனைவியையும் காப்பாற்ற பெரியசாமியார் மிதிவண்டியுடன் செய்த போராட்டம் ஏராளம். உளுந்து வியாபாரம்,  துணி வியாபாரம்,  பெற்றோல் வியாபாரம்,  ‘ஐஸ்’பழ வியாபாரம்,  மீன் வியாபாரம்,  தேங்காய் வியாபாரம்,  பழ வியாபாரம்,  மரக்கறி வியாபாரம்,  எண்ணெய் வியாபாரம் என பல தொழில்களை மிதிவண்டியை மிதித்து செய்து வந்தார். மிதிவண்டியில் ‘டியூப்பு’க்குப் பதிலாக வைக்கோல் அடைந்து,  தனது வலு முழுவதையும் கொடுத்து,  மிதிப்பார். அப்போது யாழ்ப்பாணத்துப் பிரதான வீதி மூடப்பட்டு,  ஊரியான், கொம்படி பாதைகளே வன்னியையும் யாழ்ப்பாணத்தையும் இணைக்கும். பெரியசாமியார் பின் பக்கத்தில் இருநூறு கிலோ உளுந்தையும் முன் ‘பாரில் ஐம்பது கிலோவையும் காவிக் கொண்டு லாவகமாக யாழ்ப்பாணம் சென்று வருவார். ஒரு கிலோவிற்கு இரண்டு ரூபாய் வீதம் ஐந்நூறு ரூபாய் இலாபம் உழைத்து தரும் பெரியசாமியாரின் மிதியும் மிதிவண்டியும். எப்படியும் முதல் நாள் காலை ஐந்து மணிக்கு வியாபார நண்பர்களுடன் புறப்பட்டால்,  அடுத்த நாள் அதிகாலையே வீடு திரும்புவார்கள். அவர்கள் உழைக்கும் ஐந்நூறு ரூபாய் பணம் ஆறு பேரைக்கொண்ட குடும்பத்திற்கு இரண்டு கிழமைகளுக்குப் போதும். 

ஒரு சமயம் பெரியசாமியார் கடைக்குட்டி மகன் முகுந்தனைப் பார்த்து “தம்பி நீ வளந்திட்டாய் உன்ர அண்ணன்மார்களுடைய மனைவிமார்களும் யாழ்ப்பாணத்தில் அப்படியா போச்சு. உனக்கும் பட்டம் முடிச்சு இன்னும் அரச வேல கிடைக்கவில்லை. எதற்கும் அவசர படாமல் இந்த மிதிவண்டியில் போய் வா. கூட்டாளிமார்களுடன் சேர்ந்து கண்ட கண்ட வாகனங்களில் சுற்றித்திரியாதையப்பா விரலுக்கு ஏற்றதுதான் வீக்கம் ஒரு மனிதனுக்குத் தேவை” என்று தீர்கக்தரிசிபோல அறிவுரை கூறிக் கொண்டிருக்கும் போது,  

“இந்த சைக்கிள்ள எத்தனை நாளைக்குத்தான் போய் வாரது. மூத்த அண்ணாவுக்கு பைத்தியம் மோட்டார் சைக்கிள் வச்சிக் கொண்டே வேணுமென்று பத்து பதினைந்து கிலோமீற்றர் தூரத்தில் உள்ள பள்ளிக் கூடத்திற்கு வேர்க்க வேர்க்க சைக்கிள்ள போவான். அவனை அந்த ஊரே பார்த்து சிரிக்குது எனக்கு வெட்கமா? இருக்குது.” 

“அவனும் இல்லாட்டி இப்ப நீங்க ரெண்டு பேரும் பாட்டதாரியா ஆகியிருப்பிங்களா? மற்றவனுக்கு கொஞ்சம் நன்றியாவது இருக்கு. உனக்கு ஒண்ணும் இல்லை. பாவம் அவன்  மிதிவண்டியில் மிதித்து கல்வியைக் கொடுத்தான்.   ஓ.எல். படிக்கேக்க என்னோட மிதிவண்டியில் ஐம்பது கிலோ உளுந்து மூட்டையைக் கட்டிக்கொண்டு வருவான். அவன போய்” என்றவாறு பெரியசாமியார்  தனது கைகளில் இருந்த மண்வெட்டியால் நிலத்தைக் கொத்தினார்.

நண்பனின் தொலைபேசி அழைப்பு வந்ததும் முகுந்தன் அவசர அசரமாக கதைத்துவிட்டு 

 “அப்பா எனக்கு ‘ப்ரெண்ஸ்’ ‘ஆட்டோ’ வாங்க காசு அனுப்புறானாம் ‘வேன்’ல ‘எயாபோட்டு’க்கு ஒருக்க போயிட்டு வாறன். உங்கட சைக்கிளைக் கொண்டு போகட்டா? பக்கத்து வீடு செல்வராசா வீட்டில் போட்டிட்டுப் போறன் எடுங்க. அங்கால ‘வேன்’ வரும் நண்பர்களுடன் போறன்.” என்றான் 

“சரி என்னவாது செய் முப்பத்திரெண்டு வயசாச்சி உன்ன அடிச்சா தடுக்க முடியும்? தேவையில்லாமல் ‘வேன்’ இல் திரியிறாய் இது கூடாது என்ன செய்யிறது? பழச மறந்த ஒரு மனிதனும் வாழ்ந்ததா சரித்திரம் இல்லை. என்ர சைக்கிளை மழை, வெயில் படாமல் கொட்டிலுக்குள் விட்டுட்டுப் போ...” 

மகனின் பிடிவாதத்தைக் கண்ட தாய், வீட்டுக்குள் இருந்து  ஓடி வந்தாள். 

“வேண்டாம் தம்பி போகாத போகாத என்ர மனம் ஏதோ சொல்லுது. அப்பாவோடு சேர்ந்து வேலையைச் செய். அப்பா சொன்ன மாதிரி சைக்கிள்ல  போய் அண்ணாண்ட வீட்ட பாத்திட்டுவா நாளைக்கு கூரை போடணும் போகாத தம்பி” என்று காலில் விழா குறையாக கேட்டும் அவன் கேட்கவில்லை. 

அன்று சென்றவன் தான்,  இன்று வரை அவனது பிணத்தைத் தவிர வீடு திரும்பவேயில்லை. அன்று முதல் தாயின் முகத்தில் துயரம்  சூல் கொண்டது.  தந்தையின் முகத்தில் தாடி நிரந்திரமானது.  முத்தவன் மனத்தில் தத்துவங்கள் பிறந்தன@ இடையவன் பிடிப்பற்று வாழ்ந்தான். இறுதியாக அவனது பாதங்கள் பட்ட மிதிவண்டி ‘தன்னை உருட்டி கொண்டு ஏன்? என்னை இந்த கொட்டகைக்குள் தள்ளி விட்டாய்’ என கேட்க ஏங்கி நின்றது. மிதிவண்டி பெரியசாமியாரின் பாதங்கள் மீண்டும் பட்ட போது புத்துயிர் பெற்றாலும் அவரின் முகத்தைப் பார்த்து இரக்கப்பட்டு மௌனம் காத்தது.

03 

ஓட்டு வேட்டியின் ‘பொக்கற்றில்’ இருந்த கைத்தொலைப் பேசி “டிரிங்...டிரிங்...டிரிங்...” என்று அலறுகின்றது. அந்த நாள் ஞாபகங்களிலிருந்து விடுபட்டு, மூத்தமகனின் கைத்தொலைப் பேசி அழைப்புக்குப் பதில் அளிக்கின்றார். 

“ஹலோ... ஹலோ... ஒன்றும் கதைக்கிறது விளங்கல்ல நேசா” 

“எங்க நிக்கிறீங்க அப்பா ‘கெட்’டுக்கு முன்னாலே வாறேன்” 

பொpயசாமியாருக்கு எதிரே நவீன வாகனங்களுக்கு மத்தியில் ஒரு மிதிவண்டியில் தனது மகன் வருவதை அடையாளம் கண்டுகொண்டார். மூத்தவனைக் கண்டதும் அவருடைய உள்ளம் பூரிப்படைந்தது.

சுட்டிக்காரனை, கடைக்குட்டியின் இறப்பு வீட்டில் சந்தித்ததற்கு இப்போதே சந்திக்கிறார். “குட்டி முகுந்தா வா...வா...” என்று தனது பேரனை ஆசையோடு அழைத்தார். அவனும் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் காயப்பட்ட கையைத் தூக்கிய படி,  குரங்குக் குட்டிப் போல பாய்ந்து சென்றான். தாத்தாவின் முதத்தில் அடர்ந்த பருத்திக்காடாக இருந்த மீசையையும் தாடியையும் ஒரு கரத்தினால், இழுக்க இருவரும் கட்டித்தழுவி விளையாடினர்.     

புயல் பெ.ஸ்ரீகந்தநேசன்,
மாங்குளம்.

Comments