கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் நாகலிங்கம் லோகேந்திரலிங்கத்தின் ஊடக, இலக்கியப் பணிகளை பாராட்டும் நிகழ்வு | தினகரன் வாரமஞ்சரி

கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் நாகலிங்கம் லோகேந்திரலிங்கத்தின் ஊடக, இலக்கியப் பணிகளை பாராட்டும் நிகழ்வு

கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் நாகலிங்கம் லோகேந்திரலிங்கத்தின் 50ஆண்டு கால ஊடக மற்றும் இலக்கியப் பணிகளை பாராட்டும் நிகழ்வு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் 12/07/2022செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உடுவை எஸ். தில்லை நடராஜா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் கனடா உதயன் பத்திரிகையின் இலங்கை சிறப்பு இதழின் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். அத்துடன் இலங்கை பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் இளைஞர்கள், கலைஞர்கள் சமூக ஆர்வலர்கள் சார்பில் லோகேந்திரலிங்கத்திற்கு கௌரவிப்பும் இடம்பெற்றது. இந்த வைபவத்தில் சிவஸ்ரீ வைத்தீஸ்வரகுருக்கள், மூத்த ஊடகவியலாளர் வி.தேவராஜ், சிரேஷ்ட எழுத்தாளர் கலாநிதி. சிவலிங்கம் சதீஷ்குமார், வீரகேசரி பிரதம ஆசிரியர் எஸ். ஸ்ரீ கஜன், தினகரன் பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

 

Comments