சவாட் சர்வதேச குத்துச்சண்டையில் வடக்கின் டிலக்சினிக்கு தங்கம் | தினகரன் வாரமஞ்சரி

சவாட் சர்வதேச குத்துச்சண்டையில் வடக்கின் டிலக்சினிக்கு தங்கம்

பாகிஸ்தானில் நடைபெற்ற சவாட் சர்வதேச குத்துசண்டைப் போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த டிலக்சினி கந்தசாமி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

பாகிஸ்தானில் அண்மையில் நிறைவுடைந்த 3ஆவது சவாட் (sawad International Boxing Tournament) சர்வதேச குத்துசண்டைப் போட்டியில் இலங்கையிலிருந்து 4வீரர்களும் 9வீராங்கனைகளும் என 13போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

இதில் ஒன்பது பேர் தங்கப் பதகக்கங்களையும், நான்கு பேர் வெள்ளிப் பதக்கங்களையும் வென்றனர். குறித்த போட்டியில் வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட வவுனியாவைச் சேர்ந்த டிலக்சினி கந்தசாமி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

பொருளாதார நெருக்கடி மற்றும் கஷ்டங்களுககு மத்தியிலும் தனது விடாமுயற்சியாலும், தொடர் பயிற்சியாலும் தங்கப் பதக்கத்தினை வென்று சர்வதேசத்தில் தமிழ் பேசுகின்ற வீரர்களாலும் சாதிக்க முடியும், இலங்கைக்கு பெருமை சேர்க்க முடியும் என்பதை டிலக்சினி நிரூபித்துக் காட்டியுள்ளார்.

மேலும் மாகாண, தேசிய ரீதியிலான போட்டிகளில் பங்குகொண்டு பல பதக்கங்களை வென்றுள்ள இவர், சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் விளையாட்டு விஞ்ஞான மற்றும் முகாமைத்துவ மாணவியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை குறூப் நிருபர்

Comments