கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2022; இங்கிலாந்தில் பிரமாண்டமான ஆரம்பம் | தினகரன் வாரமஞ்சரி

கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2022; இங்கிலாந்தில் பிரமாண்டமான ஆரம்பம்

இங்கிலாந்து பர்மிங்காமில் "2022கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்" வியாழக்கிழமை (28) பிரமாண்டமான முறையில் ஆரம்பமானது.

இப் போட்டிகள் ஆகஸ்ட் 8வரை நடைபெறவுள்ளது.

பர்மிங்காம் அலெக்சாண்டர் மைதானத்தில் நடைபெற்ற ஆரம்ப விழா பல சிறப்பம்சங்கள நடைபெற்றன. அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா யூசுப்சாய் கல்வியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், LGBTQ+ உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், 72நாடுகளை சேர்ந்த மொத்தம் 5054வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.  கொமன்வெல்த் போட்டியின் வரலாற்றில் முதல் முறையாக ஆடவர் பிரிவுகளை விட மகளிர் பிரிவில் அதிக போட்டிகள் நடைபெறுகிறது.

1998காமன்வெல்த் போட்டிக்கு பிறகு முதல் முறையாக கிரிக்கெட் போட்டி, இந்த தொடரில் மீண்டும் ஆரம்பமாகிறது. இதில் இந்தியா,அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட மகளிர் கிரிக்கெட் அணிகள் மட்டும் பங்கேற்கிறது.

ஆரம்ப விழாவின் சிறப்பு அம்சமாக 10அடி உயர அனிமேட்ரோனிக் காளை மைதானத்திற்கு வந்தது. இரும்பு மற்றும் இயந்திரத் தொழில்களுக்குப் புகழ்பெற்ற பர்மிங்காம் மற்றும் கொமன்வெல்த் ஆகியவற்றின் பன்முகக் கலாசாரத்தைக் காட்டுவதே வடிவமைப்பின் நோக்கமாக இருந்தது.

பின்னர் விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு ஆரம்பமானது. இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பளுதூக்கும் வீராங்கனை இந்திக்க திஸாநாயக்க மற்றும் கிரிக்கெட் வீரர் சாமரி அத்தபத்து ஆகியோர் இலங்கை கொடியை ஏந்தியவாறு அணிவகுப்பில் சென்றனர்.

விளையாட்டு நேற்று ஆரம்பிக்கப்பட்டன. இந்தப் போட்டிக்காக 72 நாடுகளைச் சேர்ந்த 5000 விளையாட்டு வீரர்கள் 280 பதக்கங்களுக்காகப் போட்டியிடவுள்ளனர்.

Comments