மட்டக்களப்பு பொலிஸ் அதிகாரியின் நேர்மை | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

மட்டக்களப்பு பொலிஸ் அதிகாரியின் நேர்மை

மட்டக்களப்பு மேல்நீதிமன்ற அரச சட்டத்தரணி அலுவலகத்தில் கடமையாற்றும் மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலைய பொலிஸ் சார்ஜன்ட் 29651கிட்னண் குலேந்திரன் என்பவர் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.

இந்த பொலிஸ் உத்தியோகத்தர் மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கருகில் கடந்த 03ஆம் திகதி பணப்பை ஒன்றை கண்டெடுத்திருந்தார்.

அதனை பரிசோதித்து பார்த்த போது 75,520  ரூபா  பணமும் ஏனைய பெறுமதியான ஆவணங்களும் காணப்பட்டன. உடனே இவ்விடயத்தை அவரது உயரதிகாரிகளுக்கு தெரிவித்து அவர்கள் முன்னிலையில் பணத்தையும் ஆவணங்களையும் உரிய நபரிடம் வழங்கியிருக்கின்றார்.

நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத்த பால தலைமையில் பணப்பை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் உயரதிகாரிகள் பொலிஸ் உத்தியோகத்தரை பாராட்டினர்.

இந்த பொலிஸ் உத்தியோகத்தர் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் கிட்னண் கோவிந்தராஜாவின் உடன்பிறந்த சகோதரரென்பதும் குறிப்பிடத்தக்கதாகும் .

மட்டக்களப்பு குறூப் நிருபர்

Comments