சுற்றுச் சூழல் பாதுகாப்பில் மாணவர்களின் பங்கு | தினகரன் வாரமஞ்சரி

சுற்றுச் சூழல் பாதுகாப்பில் மாணவர்களின் பங்கு

நம்மை சுற்றியுள்ள உயிருள்ள உயிரற்ற பொருட்களையே நாம் சுற்றுச்சூழல் என்கிறோம். ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு சுற்றுச்சூழல் பெரும்பங்கு வகிக்கின்றது.

காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு, மண் மாசுபாடு, ஒலி, ஒளி மாசுபாடு, உணவுபொருட்கள் மாசுபாடு என நமது அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் நாமே மாசுபடுத்தி வருகிறோம்..

அக்கால மக்கள் சுற்றுபுறத்தை மாசுபடுத்தினாலும் அதனை சரி செய்வதற்கான வழிகளையும் கடைப்பிடித்தனர், இயற்கையை கடவுளாக வணங்கினார்கள் ஆனால் நாம் அதனைப்பற்றி கவலைக்கொள்வதே இல்லை. பருவநிலை மாறுதல்களின் விளைவை உணர்ந்த முதல் தலைமுறையாக நாம்தான் இருக்கிறோம், அதனை சரி செய்யும் கடைசி தலைமுறையாகவும் நாம் தான் இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார் ஜே இன்ஸ்லீ.

ஆண்டுதோறும் ஜூன் 5ஆம் திகதி உலக சுற்றுச்சூழல் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது, அன்றைய தினம் பாடசாலைகளில் மானவர்களுக்கான விழிப்புணர்வு விழாக்கள் நடத்துவார்கள், மாணவர்கள் அதனை ஒருநாள் மட்டும் என கடைப்பிடிக்காமல் தினமும் கடைப்பிடிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் இப்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு முறைகள், கல்வி, சுற்றுச்சூழல் தொடர்பில் அறிவுரைகளை வழங்குகின்றன. மாணவர்கள் சிறு வயதிலிருந்தே சுற்றுசூழல் மீது அக்கறையுடன் வளர்ந்தால் அது நாட்டுக்கும் நல்லது.

சுற்றுச் சூழல் பாதுகாப்பில் மாணவர்களின் பங்கு சுற்றுச்சூழல் இது நீங்களும், நானும், இன்ன பிற உயிர்களும் வாழ முக்கியமானது. நிலம், நீர், காற்று, வெளி, நெருப்பு, உணவுச் சுழற்சி, வன ஜீவராசிகள், விவசாயம், பருவ நிலை ஆகியவை வலையைப்போல சுற்றுச்சூழலில் பிணைக்கப்பட்டுள்ளது. இவற்றில் எந்தவொரு இடத்தில் அற்றுப்போனாலும், அது நமக்கும். நம்மைச் சார்ந்த, சாராத உயிரினங்களுக்கும் பெரும் கேடு விளைவிக்கும்.

சுஜானி திருஆலன்,
வவுனியா

Comments