பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை நிச்சயம் மீட்டெடுப்பேன் என்பதே எனது பிரார்த்தனை | தினகரன் வாரமஞ்சரி

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை நிச்சயம் மீட்டெடுப்பேன் என்பதே எனது பிரார்த்தனை

பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்தாலும் அந்த நெருக்கடியிலிருந்து நாட்டை நிச்சயம் மீட்டெடுப்பதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதற்கு புனித தந்தம் மற்றும் அனைத்து கடவுள்களின் ஆசிர்வாதம் பெரும் பலமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அனைத்து மக்களுக்கும் நல்வாழ்வைக் கொண்டுவரும் புதிய பொருளாதாரம் தொடர்பில் அனைவரும் புதிய நம்பிக்கைகளுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா பெரஹர விழா மற்றும் நான்கு மகா தேவாலயங்களின் வருடாந்த பெரஹர விழா வெற்றிகரமாக நிறைவடைந்ததை முன்னிட்டு கண்டி ஜனாதிபதி மாளிகையில் (12) பிற்பகல் நடைபெற்ற வைபவத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மாளிகைக்கு ஊர்வலமாக வந்த தியவடன நிலமே நிலங்க தேல உட்பட நான்கு மகா தேவாலயங்கள் மற்றும் ஏனைய தேவாலயங்களின் நிலமேக்கள் ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலில் ஜனாதிபதியினால் வரவேற்கப்பட்டனர்.

பின்னர் தியவதன நிலமே சம்பிரதாயமாக ஜனாதிபதியிடம் சன்னஸ் பத்திரத்தை கையளித்தார்.

பெரஹராவில் கலந்து கொண்ட கலைஞர்களுக்கு சம்பிரதாயபூர்வமாக பரிசுகள் மற்றும் விருதுகள் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவிக்கையில்,

இந்தப் பாரிய பொறுப்பை நிறைவேற்றியதற்காக தியவடனே நிலமேயை முதலில் பாராட்டுகிறேன். இந்த வரலாற்று சிறப்புமிக்க எசல மகா பெரஹர சில வருடங்களின் பின்னரே பிரமாண்டமான முறையில் நடத்த முடிந்தது. கடந்த இரண்டு வருடங்களாக பிரமாண்டமான முறையில் நடத்தும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.

இம்முறை பெரஹர விழா முக்கியத்துவம் பெறுகிறது, ஏனெனில் இது மிகவும் கடினமான நேரத்தில் நடைபெறுகிறது. மறுபுறம், இந்த நாட்டில் பெரிய பொருளாதார வீழ்ச்சி உள்ள காலத்தில். இந்த அவலநிலை நம் அனைவரையும் பாதித்துள்ளது. இந்தக் காலத்தை இப்போதே நாம் முடித்துக் கொள்ள வேண்டும். மேலும் இதைவிட சவால்கள் இருக்கும் ஒரு காலம் வரலாம். இந்த எல்லாவற்றிலிருந்தும் நாம் மீள வேண்டும், நம் நாட்டிற்கு புதிய பொருளாதாரத்தை உருவாக்க முன்வருவதற்கு நம்மை தயார்படுத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

Comments