வீரமுனை படுகொலை 32 வருடங்கள் நிறைவு | தினகரன் வாரமஞ்சரி

வீரமுனை படுகொலை 32 வருடங்கள் நிறைவு

1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி வீரமுனையில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான கொடூரமான படுகொலை தினத்தின் 32வது வருட நினைவேந்தல் நிகழ்வு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை வீரமுனையில் இடம்பெற்றது.

தமிழினத்தின் புனித தலமான ஆலயத்திற்குள் புகுந்து இராணுவத்தினரும்,துணை படையினரும் நடத்திய இனவெறி வேட்டையிலேயே 55பேர் அந்த இடத்திலேயே மரணமானார்கள்.

அவர்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காக 32ஆவது வருடமாக இந் நினைவேந்தல் நடாத்தப்பட்டு வருகிறது .

காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன்,சமுக செயற்பாட்டாளர் செல்வராஜா கணேஷ் உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டனர்.

காரைதீவு குறூப் நிருபர்

 

Comments