QR குறியீட்டை அமுல்படுத்தாத 12 நிரப்பு நிலையங்களுக்கு விநியோகம் நிறுத்தம் | தினகரன் வாரமஞ்சரி

QR குறியீட்டை அமுல்படுத்தாத 12 நிரப்பு நிலையங்களுக்கு விநியோகம் நிறுத்தம்

எரிபொருள் விநியோகத்துக்கான QR குறியீடு முறையை அமுல்படுத்தாத 12நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. 

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வர்த்தகப் பிரிவினருடன் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர தெரிவித்துள்ளார் 

இதன்படி, QR அமைப்பிற்கு குறைந்தளவு பங்களிப்பு செய்த 12எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்த தீர்மானிக்கப்பட்டது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்படும் பொதுமக்களின் முறைப்பாடுகள் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர தலைமையில் நடைபெற்ற இம் மீளாய்வு கூட்டத்தின் போது தேசிய எரிபொருள் பாஸ் QR அமைப்பு, பொதுமக்களின் புகார்கள் மற்றும் நுகர்வோர் புள்ளிகளின் பதிவு ஆகியவை மதிப்பாய்வு செய்யப்பட்டன.

Comments