இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம்; இன்று டெஸ்ட் போட்டி ஆரம்பம் | தினகரன் வாரமஞ்சரி

இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம்; இன்று டெஸ்ட் போட்டி ஆரம்பம்

இலங்கை 19வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணத்தில் யங் லயன்ஸ் இன்விடேஷனல் லெவன் (Young Lions Invitational XI) அணியுடனான மூன்று நாள் பயிற்சி ஆட்டம் சமநிலையில் முடிவுற்றது.  

வியாழக்கிழமை (18) லௌபரோவில் உள்ள ப்ரோக்கிங்டன் மைதானத்தில் நடைபெற்றது. 

கடந்த 16ஆம் திகதி ஆரம்பமான இந்த போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 

எனவே, மூன்றாம் நாள் ஆட்டம் ஆரம்பமாகும் போது இலங்கை தனது முதல் இன்னிங்சுக்காக 4விக்கெட் இழப்புக்கு 182ஒட்டங்களை எடுத்திருந்தது. 

அப்போது 81ஓட்டங்களைப் பெற்றிருந்த இடது கை துடுப்பாட்ட வீரர் அசித்த வன்னிநாயக்க தனது சதத்தை பூர்த்தி செய்து பின்னர் (retired out) முறையில் வெளியேரினார். 200பந்துகளில் 13பவுண்டரிகளுடன் அவரது சதம் பதிவு செய்யப்பட்டது. 

அணித்தலைவர் ரவின் டி சில்வா 33ஓட்டங்களைப் பெற்று முதல் இன்னிங்ஸில் இலங்கையின் நடுப்பகுதி துடுப்பாட்டத்தை வலுப்படுத்த, இறுதியில் இலங்கை 19வயதுக்குட்பட்ட அணி 7விக்கெட் இழப்புக்கு 248ஓட்டங்களைப் பெற்று தமது இன்னிங்ஸை முடித்துக்கொண்டது. 

இடது கை சுழற்பந்து வீச்சாளர் வனுஜ குமார உட்பட இலங்கையின் இளம் வீரர்கள் ஆரம்பம் முதலே எதிரணிக்கு அதிக அழுத்தத்தை கொடுத்ததன் விளைவாக இலங்கை,(Young Lions Invitational XI) அணியை முதலில் 104ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்த முடிந்தது. இன்னிங்ஸ். 

பந்துவீச்சில் வனுஜ 13ஓட்டங்களுக்கு 4விக்கெட்டுக்களையும், இடது கை வேகப்பந்து வீச்சாளர்களான துலாஜ் சமுதித மற்றும் துவிந்து ரணதுங்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். 

144ஓட்டங்களுக்கு முதல் இன்னிங்ஸில் அதிக முன்னேற்றமான ஓட்டங்களுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அபிஷேக் லியனாராச்சி அரைசதம் (57பந்துகளில் 51ஓட்டங்கள்) பெற்றார். 

இறுதியில், போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்ததால், அப்போது இலங்கையின் இரண்டாவது இன்னிங்ஸ் 132/2என இருந்தது. 

19வயதுக்குட்பட்ட இங்கிலாந்து அணியுடனான உத்தியோகபூர்வ டெஸ்ட் போட்டி இன்று செம்ஸ்ஃபோர்டில் (Chelmsford) மைதானத்தில் ஆரம்பமாகிறது. 

இந்த போட்டியில் 2 நான்கு நாள் இளையோர் டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 இளையோர் ஒரு நாள் போட்டிகள் அடங்கும்.

Comments