'இளம் தலைமைத்துவ ஆளுமையும் சஹீட் எம். ரிஸ்மியுடனான நேர்காணலும்'; நூல் வெளியீட்டு விழா | தினகரன் வாரமஞ்சரி

'இளம் தலைமைத்துவ ஆளுமையும் சஹீட் எம். ரிஸ்மியுடனான நேர்காணலும்'; நூல் வெளியீட்டு விழா

லேக் ஹவுஸ், நிறுவனத்தின் வெ ளியீடுகளான தினகரன்,தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைகளின் ஊடக அனுசரணையுடன் எமது சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அலி தினகரனில் எழுதிய நேர்காணல் பத்திகளின் தொகுப்பான 'இளம் தலைமைத்துவ ஆளுமையும் சஹீட் எம். ரிஸ்மியுடனான நேர்காணலும்' எனும் நூல் வெளியீட்டு விழா இன்று பி. ப 2.30மணிக்கு    கொழும்பு -- 3   மென்டரினா ஹோட்டலில் நடைபெறும்.

அகில இலங்கை வை. எம். எம். ஏ பேரவையின் ஏற்பாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையில் நடைபெறும் நிகழ்வில் பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர் கலந்து கொள்கிறார்.

நூல் அறிமுக வுரை:- லண்டனிலிருந்து...) பொறியியலாளர் இர்பான் இக்பால். சிரேஷ்ட ஊடகவியலாளர்.

ஆசியுரை :- ரி. செந்தில்வேலவர், (பிரதம ஆசிரியர் தினகரன்,தினகரன் வாரமஞ்சரி)

வாழ்த்துரைகள் :-

1. ரவூப் ஹக்கீம் பா.உ - தலைவர்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.

2.ரிஷாட் பதியுத்தீன் பா.உ - தலைவர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்.

3. ஊடகவியலாளர் என். எம். அமீன் - தலைவர், முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா.

4. எம். எம். பீர்முஹம்மது தலைவர், மாத்தளை இஸ்லாமிய தமிழ் இலக்கிய பேரவை.

நூல் கருத்துரை :

1. ஏ. எம் நஹியா (முன்னாள் பணிப்பாளர் நாயகம், புனர்வாழ்வு மீனவர் ,வீடமைப்பு மீனவர் நலன்)

2. கவிஞர் ரா. நித்தியானந்தன் (முன்ளாள் விரிவுரையாளர், அரசியல்     விஞ்ஞானத்துறை பேராதனைப் பல்கலைக்கழகம்)

நூலாசிரியர் உரை : இக்பால் அலி

ஏற்புரை :- சஹீட் எம். ரிஸ்மி (தேசியத் தலைவர்,  அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவை)

நூல் வெளியீட்டு விழாவில் அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பல முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இந்நிகழ்வில் நாட்டின் உயர்ச்சிக்காகவும்  மக்களின் மேம்பாட்டுக்காகவும் அர்ப்பணிப்போடு சேவையாற்றி வரும் மக்கள் நலன் பேணும் துறை சார்ந்த இளம் தலைமைத்துவங்களையும் ஊடகத் துறை சார்ந்தவர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் உள்ளடங்கும்.

நூல்  அணிந்துரையில்...

அகில இலங்கை முஸ்லிம் வாலிப சங்கப் பேரவையின் 54ஆவது தேசிய தலைவர் எம்.எஸ்.எம். ரிஸ்மி பற்றி இக்பால் அலி ஆக்கியுள்ள 'இளம் தலைமைத்துவ ஆளுமையும் - சஹீட் எம். ரிஸ்மியுடனான நேர்காணலும்' என்ற இந்நூல் வரலாற்றுக்கண் கொண்டு பார்ப்பவர்களுக்கு மிகுந்த பிரயோசனமுடையது. மத்திய மாகாண பாத்ததும்பர பிரதேசச் செயலாளர் பிரிவிலுள்ள மடவளையில் பிறந்தவர் ரிஸ்மி. டச்சுக்காரர் கால சமயமாற்றப் பேரலையிலிருந்து தம்மையும் தம் உடன்பிறப்புக்களையும் பாதுகாத்துக் கொள்ளும் 

பொருட்டு திருகோணமலையிலிருந்து வெளியேறி கலாவௌ ஊடாக பொலன்னறுவைக்கு இடம்பெயர்ந்து, அதன் பின்னர், கண்டியை அடைந்து மடவளையில் குடியமர்ந்தவர்களே ரிஸ்மியின் மூதாதையர்களான மடவளை முஸ்லிம்கள். அவர்களின் குடியமர்வு 1638 - 1680இற்கு இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்தது.   ரிஸ்மி பற்றிய இந்நூலுக்கு அணிந்துரை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். 

அணிந்துரை 

மடவளை மதீனா பாடசாலையிலும் பின்னர் கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரியிலும் கற்றவர் ரிஸ்மி. உள்ளூராட்சி மன்ற ஆளுகை நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் இவர் பணியாற்றியிருக்கிறார். மடவளை வை.எம்.எம்.ஏ. யினூடாக தம் சமூகப் பணியை ஆரம்பித்த இவர் காலப்போக்கில், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் மாவட்டப் பணிப்பாளராக, தேசிய பொதுச் செயலாளராக, தேசிய உப தலைவராக வெல்லாம் பணி செய்து அதன் 54ஆவது தேசியத் தலைவராக இப்போது பணி செய்கிறார். நாடளாவிய ரீதியில் 150இற்கும் மேற்பட்ட கிளைகளை வை.எம்.எம்.ஏ. தேசிய பேரவை  கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  கலாநிதி எ.எம்.எ. அஸீஸ் கண்டியில் உதவி அரசாங்க அதிபராக கடமையாற்றிய காலத்தில் கண்டி முஸ்லிம் சங்கத்தின் தலைவர் என்ற வகையில் அதன் செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டார். 1915இலிருந்து இயங்கி வந்த இக்கண்டி முஸ்லிம் சங்கம் 30வருடங்களின் பின் 29.07.1944இல் தன் பெயரை கண்டி வை.எம்.எம்.ஏ. என மாற்றிக் கொண்டது.ரிஸ்மியின் ஊரான மடவளையிலும் வை.எம்.எம்.ஏ. இயக்கம் 04-.11-.1944இல் தோற்றுவிக்கப்பட்டது. 

இவ்வியக்கமே மக்கா, மதீனா முதலான சவூதி அரேபியா நகரங்கள் பஞ்சத்தில் சிக்கித் தவித்த போது, பஞ்ச நிவாரண நிதி சேகரித்து அம்மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியது. அந்த அளவுக்கு தாராள மனம் கொண்ட சமூகப் பற்றாளர்கள் நிறைந்து வாழும் ஊர் மடவளை ஊர்.   அறிஞர் எ.எம்.எ. அஸீஸ் தலைமையில் 02-.04-.1950இல் நிகழ்ந்த முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் இலங்கையில் இயங்கிக் கொண்டிருக்கும் முஸ்லிம் இளைஞர் இயக்கங்கள் அனைத்தையும் ஒரு மத்திய அமைப்பின் கீழ் ஒன்றிணைக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டது,அதற்கான அங்குராப்பண வைபவம் 30-.04-.1950இல் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் நிகழ்ந்த போது 17வை.எம்.எம்.ஏ. க்களைப் பிரதிநிதித்துவப் 

படுத்திய 67பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அம்மாநாட்டில் தான் 'அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை' தோற்றம் பெற்றது. ரிஸ்மியின் கிராமமான மடவளை ஊரில் இயங்கிக் கொண்டிருந்த வை.எம்.எம்.ஏ. யின் பிரதிநிதிகளும் இம்மாநாட்டில் பங்கு கொண்டு சிறப்பித்தனர். வை.எம்.எம்.ஏ. பேரவையின் முதலாவது தலைவராக எ.எம்.எ. 

அஸீஸ் தெரிவானார். 1950/51இ 1951/52இ 1952/53களில் அதன் தலைவராகவும் அதன் காப்பளராகவும் பணி செய்து முஸ்லிம் சமூகத்தின் வழிகாட்டியாக, இளைஞர் தலைமைத்துவத்தின் செயற்பாட்டு வடிவமைப்பாளராக அஸீஸ் விளங்கினார். 1956 

பெப்ரவரியில் கொழும்பு, தெமட்டகொட வீதியில், அதன் தலைமைக் காரியாலயம் அமையும் வரை அஸீஸின் பாண்ஸ் பிளேஸ் இல்லமே வை.எம்.எம்.ஏ. பேரவையின் தலைமைக் காரியாலயமாக விளங்கியது. 

நம்பிக்கை, ஒற்றுமை, கட்டுப்பாடு என்பன இவ்வியக்கத்தின் தாரக மந்திரம் என்பதை அறியும் எவரும் ரிஸ்மி எதை நாடிச் செயற்பட்டார் என்பதைப் புரிந்து கொள்வர். முஸ்லிம் விவாகரத்துச் சட்டம் சம்பந்தமாக முஸ்லிம்களிடையே காணப்பட்ட பிளவுபட்ட கருத்துக்களை அடையாளம் கண்ட வை.எம்.எம்.ஏ. பேரவை உயர் நீதிமன்ற நீதிபதி சலீம் மர்சூப், ஜனாதிபதி  சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா முதலானோரின் தலைமையில் இயங்கிய குழுக்களிடையே உடன்பாடு காணும் முயற்சியில் ஈடுபட்டமையும், இவ்விடயமாக 10-.09-.2018இல் மொன்டரினா ஹோட்டலில் நிகழ்ந்த கூட்டமொன்றை வை.எம்.எம்.ஏ. பேரவை ஏற்பாடு செய்திருந்தமையும்  கவனத்திற்குரியது. சட்டத்தரணி ஜாவிட் யூசுப் நெறிப்படுத்திய மேற்படி கூட்டத்தில் அமைச்சர் அலி சப்ரி முக்கிய உரை நிகழ்த்தினார். வை.எம்.எம்.ஏ. பேரவையின் தலைவர் கே. டீன் தலைமையில் நிகழ்ந்த இக்கூட்டத்தில் ரிஸ்மியின் பங்கும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதாக 

அமைந்திருந்தது. 'வக்ப்' சட்டத்தை அமுல் நடத்துவது சம்பந்தமாக அஸீஸ் தலைமையிலான வை.எம்.எம்.ஏ. தூதுக் குழு அப்போதைய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஏ.பி. ஜயசூரியாவை அவரின் அமைச்சில் சந்தித்ததுக் கலந்துரையாடியமை போன்ற நிகழ்வுகளும் இச்சந்தர்ப்பத்தில் எம் கவனத்தை ஈர்க்கின்றன. கொரோனாவினால் உயிர் நீத்த முஸ்லிம்களின் நல்லடக்க விடயத்தில் ரிஸ்மி தலைமையில் வை.எம்.எம்.ஏ. பேரவையின் உயர்பீட அங்கத்தவர்களின் கரிசனையும் கவனத்திற்குரியது. கொரோனாவினால் மரணமடைந்தவர்களை ஓட்டமாவடி 'மஜ்மா நகர்' மையவாடியில் நல்லடக்கம் செய்ய ஒத்துக் கொண்டமைக்காக ரிஸ்மியின் வை.எம்.எம்.ஏ.பேரவை ஓட்டமாவடி பிரதேச சபைக்கு விருது வழங்கி கௌரவித்தது. 

'இப்பிரதேச மக்களும் ஓட்டமாவடிப் பிரதேச சபையும் கொரோனாவினால் மரணமடைந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்யும் விவகாரத்தில் பாரிய தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் செய்துள்ளார்கள். இம்மக்கள் உடல்களைத் தூக்கித் தூக்கி அடக்கம் செய்தது மட்டுமல்ல அந்த மையித்துக்களுடன் வரும் அத்தனை 

பேருக்கும் உணவு, தங்குமிட வசதி வழங்கி உன்னத மனிதர்களாக இப்பிரதேச மக்கள் வரலாறு படைத்துள்ளனர்' என்று ரிஸ்மி பதிவிட்டிருப்பது கவனத்திற்குரியது. 'இத்தகைய சேவைப் பணியால் நிலைகுலைந்து அல்லலுற்றுக் கொண்டிருக்கும் ஓட்டமாவடி பிரதேச மக்களின் நலனில் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகம் கரிசனை கொள்ள வேண்டியிருக்கிறது' 

என்ற ரிஸ்மியின் மனிதாபிமானக் கருத்தும் இந்நூலில் பதிவாகி  இருக்கிறது. 

முஸ்லிம் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கென புலமைப் பரிசில் திட்டமொன்றை அப்போதைய வை.எம்.எம்.ஏ. பேரவைத் தலைவர், என்னுடைய சாஹிராக் கல்லூரி மாணவன், பலஸ்தீனத்தில் இலங்கைத் தூதுவராக இருந்த பௌசான் அன்வர் 2000ஆம் ஆண்டில் தொடங்கி வைத்தார். பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் இத்திட்டத்தினால் பயன்  பெற்றனர். இத்திட்டம் பின்னால் விரிவாக்கம் பெற்று 300மாணவர்கள் புலமைப் பரிசில் பெறுமளவுக்கு வளர்ச்சி கண்டது.

இந்த விரிவாக்கத்தில் ரிஸ்மியின் பங்களிப்பும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய முக்கியத்துவமுடையது.               

மடவளையில் வட்டி ஒழிப்பின் அடையாளமாக அமைந்துள்ள 'அந்நூர் இஸ்லாமிய நிதியம்' வங்கி அமைப்பாக உருமாறிய நிகழ்வும் ரிஸ்மியுடன் சம்பந்தப்படுகிறது. அவ்வமைப்பின் ஆலோசகராகவும், பணிப்பாளர் சபை உறுப்பிராகவும் ரிஸ்மி இருபது வருடங்களாகச்

செயற்படுவதையும் இந்நூல் எமக்கெல்லாம் அறியத் தருகிறது.சமூகம் முன்னேற வேண்டும் என்ற உணர்வை ரிஸ்மியிடம் நான் காண்கிறேன். ரிஸ்மியின் சமூக உணர்வு, சமூகப் பற்று, அதன் வெளிப்படுத்துகை என்பனவற்றைச் சமூகத்தின் கவனத்திற்கு எத்தி வைப்பதன் மூலம் சமூகப் பற்றாளர்கள் பலரை உருவாக்கும் நல்லதொரு முயற்சியைச் செய்திருக்கின்ற இக்பால் அலியும் பாராட்டப்பட வேண்டியவராகிறார். இக்பால் அலியின் இம்முயற்சி சமூக உணர்வுகொண்ட ரிஸ்மி போன்ற இன்னும் பலரை நிச்சயமாக உருவாக்கும் என நம்பலாம்.

இந்நூலாசிரியர் இக்பால் அலி, 'முற்றத்துக்கு வாருங்கள்','புள்ளிகள் சில புள்ளிகள்' என்ற கவிதை நூல்களை ஆக்கியவர். 'நான் மூன்ற சக்கரக்காரன்', 'அன்பு பெருக' என்ற இரு பாடல் நூல்களையும், 'நல்லதொரு பயணம்' என்ற சிறுவர் கதை நூலையும் இன்று 'முஸ்லிம்களின் வரலாற்றில், கலாநிதி கே.எம்.எச். காலிதீன்' என்ற நூலையும் 'நயனம்' கலை இலக்கிய சஞ்சிகையையும் வெளிக் கொணர்ந்தவர். பிரபல இலத்திரனியல் ஊடகங்களினதும், தேசியப்

பத்திரிகைகளினதும் பிராந்திய செய்தியாளராகச் செயற்படும் இவர் கடந்த 30வருடங்களாக இலக்கியப்பணி செய்து வருகிறார் என்பதும் பதிவிடற்குரியது. தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவியொருவர் இவரின் கவிதை பற்றிய ஆய்வில் ஈடுபடுவதும் குறித்துச் சொல்லப்பட

வேண்டிய முக்கியத்துவமுடையது. அந்த வகையில் இந்நூல் ஆசிரியர் இக்பால் அலி உயர்வாகப் பேசும் ரிஸ்மி சமூகத்தின் கவனத்திற் குரியவராகின்றார். அவரின் சேவைகளும் சமூகக் கணிப்பில் உயர்வாகத் தெரிகின்றன.

ஏ.எம். நஹியா
முன்னாள் பணிப்பாளர் நாயகம் - புனர்வாழ்வு மற்றும் 
முன்னாள் பணிப்பாளர் நாயகம் - மீனவர் வீடமைப்பு, மீனவர் நலன்.

Comments