இலங்கைக்கு 03 மில்லியன் பவுண்ஸ்; பிரிட்டன் அவசர உணவு மற்றும் விவசாய உதவிகளை வழங்கும் | தினகரன் வாரமஞ்சரி

இலங்கைக்கு 03 மில்லியன் பவுண்ஸ்; பிரிட்டன் அவசர உணவு மற்றும் விவசாய உதவிகளை வழங்கும்

பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கையருக்கு பிரிட்டன் அவசர உணவு மற்றும் விவசாய உதவிகளை வழங்கவுள்ளதாக அந்த நாட்டின் இராஜாங்க அமைச்சர் தாரிக் அஹமட் பிரபு தெரிவித்துள்ளார்.   ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியுடனான சந்திப்பின் போது தமது நாடு இலங்கைக்கு 03மில்லியன் பவுண்ஸ் பெறுமதியான உயிர்காக்கும் உதவிப்பொதிகளை வழங்கவுள்ளதாக தாரிக் அஹமட் அறிவித்துள்ளார். 

செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகளின் முகவர் நிறுவனங்களூடாக இந்த உதவிகள் வழங்கப்படவுள்ளன. 

உணவு, விதைகள் மற்றும் பயிர்ச்செய்கைக்கு உதவும் கருவிகள் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையிலிருந்து தப்பியவர்கள் உட்பட மனநலப் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக இந்த உதவிகள் வழங்கப்படவுள்ளன. 

சவாலான காலத்தை எதிர்கொள்ளும் இலங்கை மக்களுக்கு பிரிட்டன் துணை நிற்பதாக இதன்போது தாரிக் அஹமட் பிரபு குறிப்பிட்டுள்ளார்.

Comments