ஜனாதிபதி நாளை ஜப்பான் பயணம் | தினகரன் வாரமஞ்சரி

ஜனாதிபதி நாளை ஜப்பான் பயணம்

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேயின் உத்தியோகபூர்வ இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை 26ஆம் திகதி ஜப்பான் பயணமாகிறார்.  

ஷின்ஷோ அபேயின் உத்தியோகபூர்வ இறுதிச் சடங்கு டோக்கியோவில் நாளை மறுதினம் 27ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த உத்தியோகபூர்வ இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள 190வெளிநாட்டு பிரமுகர்கள் மற்றும் அரச தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  

ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா மற்றும் ஜப்பானிய அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளையும் ஜனாதிபதி இதன்போது சந்திக்கவுள்ளார்.  

ஜப்பான் விஜயத்தின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 29ஆம் திகதி பிலிப்பைன்ஸில் நடைபெறும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்று பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பொங் பொங் மார்கோஸை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பின் பின்னர் ஜனாதிபதி எதிர்வரும் 30ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார்.

Comments