குழியொன்றுக்குள் இரண்டு ஆண்களின் சடலங்கள் மீட்பு | தினகரன் வாரமஞ்சரி

குழியொன்றுக்குள் இரண்டு ஆண்களின் சடலங்கள் மீட்பு

நுவரெலியா, வலப்பனை பகுதியில் குழியொன்றுக்குள்ளிருந்து இரு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

புதையல் தேடல் அல்லது மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த போது இவர்கள் மரணித்திருக்கலாமென சந்தேகிக்கப்படுவதுடன் அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

வலப்பனை, குருந்துஓய பகுதியில் புதையல் அல்லது மாணிக்கக்கல் அகழ்வு செய்யும் பகுதியென கருதப்படும், குழியொன்றிலிருந்தே 61வயதான அபேசிங்க பண்டா மற்றும் 30வயதான ருவன் குமார என்ற இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 

இருவரும் நேற்று முன்தினம் வீடு திரும்பாததால் உறவினர்கள் வலப்பனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். 

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் போதே, இரு சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  குழிக்குள்ளிருந்து தண்ணீர் இறைக்கும் மோட்டார் ஒன்றும் குழிக்கு வெளியே ஜெனடேட்டர் உள்ளிட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹற்றன் சுழற்சி நிருபர்

 

Comments