பாராளுமன்றம் நாளை கூடுகிறது; அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் மீது விவாதம் | தினகரன் வாரமஞ்சரி

பாராளுமன்றம் நாளை கூடுகிறது; அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் மீது விவாதம்

பாராளுமன்றம் நாளை திங்கட்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவின் தலைமையில் கூடுகிறது. 

22 ஆவது திருத்தம் தொடர்பான பாராளுமன்ற விவாதம் எதிர்வரும் 06 மற்றும் 07ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்தது.  22 ஆவது திருத்தம் ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான விவாதத்தை 06 மற்றும் 07ஆம் திகதிகளில் நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.  பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான தெரிவுக்குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.  அதேவேளை இம்முறை பாராளுமன்ற அமர்வுகள் 03ஆம் திகதி முதல் 07 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. அத்துடன் 03ஆம்திகதி திங்கட்கிழமை வாய்மூல விடைக் கான வினாக்களுக்காக ஒதுக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம் 

 

Comments