பெரும்போகத்துக்குத் தேவையான உரம் உரிய நேரத்தில் வழங்கப்படும் | தினகரன் வாரமஞ்சரி

பெரும்போகத்துக்குத் தேவையான உரம் உரிய நேரத்தில் வழங்கப்படும்

பெரும்போகத்துக்குத் தேவையான உர வகைகளை உரிய நேரத்தில் போதுமானளவில் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவையான உரங்களைக் கொள்வனவு செய்வதற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் அவற்றை விவசாயிகளுக்கு விநியோகிக்க தயார் நிலையிலிருப்பதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.   பெரும்போகத்துக்குத் தேவையான உரங்களை வழங்குவது குறித்து ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் (29) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், பெரும்போகத்தில் நெற்செய்கை மற்றும் ஏனைய விவசாய பயிர்ச் செய்கைக்குத் தேவையான சேதன மற்றும் இரசாயன உரங்களை வழங்குவது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதற்கமைய, விவசாயிகள் எவ்வித சந்தேகமுமின்றி அடுத்த பெரும்போகத்தில் பயிர்ச் செய்கையை ஆரம்பிக்க முடியுமென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார். 

Comments