பெற்றோலின் விலை நேற்று நள்ளிரவு முதல் குறைப்பு | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

பெற்றோலின் விலை நேற்று நள்ளிரவு முதல் குறைப்பு

பெற்றோலின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார். அதனடிப்படையில் 92ரக பெற்றோலின்  விலை லீற்றருக்கு 40ரூபாவும், 95ரக பெற்றோலின் விலை லீற்றருக்கு 30ரூபாவும் குறைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார்.

இதனடிப்படையில், 92 ரக பெற்றோலின் புதிய விலை 410 ரூபாவாகவும், 95 ரக பெற்றோலின் புதிய விலை 510 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர  ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Comments