மட்டு.இராமகிருஷ்ண மிஷனுக்கு விஜயம் செய்த இந்தியத் தூதுவர் | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

மட்டு.இராமகிருஷ்ண மிஷனுக்கு விஜயம் செய்த இந்தியத் தூதுவர்

இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே நேற்று (01) சனிக்கிழமை மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் சிறுவர் இல்லத்துக்கு விஜயம் செய்தார்.  இராமகிருஷ்ண மிஷன் சிறுவர் இல்ல முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்த ஜீ மகராஜ், உதவி முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் ஆகியோருடன் இல்ல மாணவர்கள் இந்திய உயர்ஸ்தானிகரை வரவேற்றனர். 

அவர், இல்லத்திலுள்ள இராமகிருஷ்ணர் ஆலயத்துக்கு சென்று நவராத்திரி விசேட பூஜையில் கலந்து கொண்டதுடன் அருள்மிகு துர்க்கா தேவிக்கு புஷ்பாஞ்சலி செலுத்தினார். 

மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பணிகளை அவர் கேட்டறிந்து புகழாரம் சூட்டியதுடன் பாராட்டி நன்றியும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு விஷேட, காரைதீவு குறூப் நிருபர்கள் 

 

Comments