யாழ்.வல்வெட்டித்துறையில் சோகம்; வீடொன்றில் எரிந்த நிலையில் தம்பதியினர் சடலமாக மீட்பு | தினகரன் வாரமஞ்சரி

யாழ்.வல்வெட்டித்துறையில் சோகம்; வீடொன்றில் எரிந்த நிலையில் தம்பதியினர் சடலமாக மீட்பு

யாழ். வல்வெட்டித்துறை, நெடியகாடு பகுதியிலுள்ள வீடொன்றில் கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்குள்ளாகி நேற்று சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 

நெடியகாடு, ஏஜிஏ ஒழுங்கையைச் சேர்ந்த சரவணபவா ரஞ்சித்குமார் (வயது -30) அவரது மனைவி கிருசாந்தினி (வயது -26) என்ற இருவருமே நேற்று வீட்டுக்குள்ளிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 

தம்பதிகளின் படுக்கையறைக்குள் நேற்று அதிகாலை 04மணியளவில் தீ பற்றி எரிவதைக் கண்ட வீட்டிலிருந்தவர் அறையை உடைத்து உள்நுழைந்த போது இருவரும் தீயில் எரிந்து சடலமாகக் காணப்பட்டதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. 

தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையென்பதுடன் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ். விசேட நிருபர் 

 

Comments