அருந்ததி நிறுவனம் மட்டுநகரில் இம்மாதம் நடத்தவிருக்கும் 'மாற்று மோதிரம்' கண்காட்சி | தினகரன் வாரமஞ்சரி

அருந்ததி நிறுவனம் மட்டுநகரில் இம்மாதம் நடத்தவிருக்கும் 'மாற்று மோதிரம்' கண்காட்சி

திருமண சேவை மற்றும் மணப்பெண் அலங்காரக் கலைகளை நடத்தி வருகின்ற அருந்ததி நிறுவனம் இம் மாதம் 15ஆம் திகதி மட்டக்களப்பில் உள்ள அஞ்சனா கிராண்ட் பலஸ் ஹோட்டலில் 'மாற்று மோதிரம்' என்ற பெயரிலான நிகழ்ச்சியொன்றை நடத்தவிருப்பதாக அந்நிறுவனத்தின் பணிப்பாளர் கே. மேகலா தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சிக்கு தினகரன் மற்றும் வாரமஞ்சரி பத்திரிகைகள் ஊடக அனுசரணை வழங்குகின்றன. கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்  கருத்துத் தெரிவித்த அருந்ததி நிறுவனத்தின் பணிப்பாளர் மேகலா : 

கடந்த வருடம் கொழும்பு பி.எம்.ஐ.சி.எச் இல் மிகப் பிரமாண்டமாக இந்த மாற்று மோதிரம் கண்காட்சியை நடத்தினோம். அதன் பின்னர் யாழ்ப்பாணத்திலும் நடத்தி பெண் திறமையாளர்கள் பலரையும் இந்துறையில் வெளிக்கொண்டு வந்துள்ளோம். சுயதொழில் முயற்சியாளர்களான பெண்களுக்கு நாங்கள் கைகொடுத்து வருகின்றோம். கடந்த வரும் கொவிட் 19தொற்று காரணமாக இத்துறை சார்ந்தவர்களின் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது. தற்பொழுது புதிய வடிவிலான மணப்பெண் அலங்காரங்கள் நவீன முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதனை கருத்திற் கொண்டு மேலும் இத்துறை சார்ந்தவர்களை ஊக்குவிக்கும்முகமாக இத்துறையை   எனது அருந்ததி நிறுவனம் மீள ஆரம்பித்துள்ளது. 

கிழக்கு மாகாணத்தில் உள்ள இத்துறை சார்ந்தவர்களது வேண்டுகோளின் பேரில் இக்கண்காட்சியை நடத்த திட்டமிட்டுள்ளோம். இச்சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பில் கேக் கண்காட்சியும் நடைபெறும். அத்துடன் திருமண சேவை, கொட்டுமேளக் காட்சி, மாற்றுமோதிரம் காட்சிகள் மேடையேற்றப்படும்.என மேனகா தெரிவித்தார். இந்த ஊடக மாநாட்டில் தினகரன், வாரமஞ்சரி பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர், ஏற்பாட்டாளர் கருணாகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

(அஷ்ரப் ஏ சமத்)

Comments