இலங்கை வானொலி தமிழ்ச் சேவையின் ஹரிஹர சர்மா ஐயா கனடாவில் காலமானார் | தினகரன் வாரமஞ்சரி

இலங்கை வானொலி தமிழ்ச் சேவையின் ஹரிஹர சர்மா ஐயா கனடாவில் காலமானார்

இலங்கை வானொலி தமிழ்ச் சேவையில் பல்வேறு பதவிகளை வகித்த ஹரிஹர சர்மா வெள்ளிக்கிழமை கனடாவில் காலமானார். சமய நிகழ்ச்சிகள் பலவற்றை காலத்திற்கேற்ப வடிவமைத்து வழங்கிய பெருமை இவரையே சாரும்.

நல்லூர் கந்தசுவாமி கோயில், நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயம், திருகோணமலை பத்திரகாளி அம்மன் ஆகிய ஆலய தேர், தீர்த்த உற்சவ காலங்களில் அழகு தமிழில் நேர்முக வர்ணனை செய்து சைவ மக்களின் பாராட்டினைப் பெற்றவர் இவர்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச் சேவையில் இயல், நாடக கட்டுப்பாட்டாளரக பணியாற்றி ஓய்வுபெற்றார். பின்னர் குடும்பத்தினருடன் கனடா சென்று அங்கு கனடா றிச்மண்ட் ஸ்ரீ முருகன் ஆலய பிரதம குருவாக

தொண்டாற்றினார். ஹரிஹர சர்மாவின் இறுதிக்கிரிகைகள் நேற்று கனடா நேரப்படி காலை 9.00 மணிக்கு நடைபெற்றது. அவரின் ஆத்மா மோட்சத்தை அடைய வானொலி நண்பர்கள் சார்பில் பிரார்த்திக்கின்றோம்.

Comments