சதீஸ் செல்வராஜ் எழுதிய 'குளிரும் தேசத்துக் கம்பளிகள்' நுால் வெளியீடு | தினகரன் வாரமஞ்சரி

சதீஸ் செல்வராஜ் எழுதிய 'குளிரும் தேசத்துக் கம்பளிகள்' நுால் வெளியீடு

எழுத்தாளரும் ஊடகவியலாளருமான சதீஸ் செல்வராஜ் எழுதிய நெம்புகோல் வெளியீடாக வந்திருக்கும் 'குளிரும்தே சத்துக் கம்பளிகள்' நுால் வெளியீட்டு விழா எதிர்வரும் 22ஆம் திகதி கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் பி.ப. 4.30மணிக்கு இடம்பெறவுள்ளது.

முதற்பிரதியை இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக் கொள்வார்.

2022தமிழ்நாடு - புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் அரசியல், சமூகம், வரலாறு, கல்வி மற்றும் அறிவியல் சார்ந்த கட்டுரையில் 'குளிரும் தேசத்துக் கம்பளிகள்' விருது வென்றுள்ளமை குறிப்பிடதக்கது.

சாகித்தியரத்னா தெளிவத்தை ஜோசப் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் கௌரவ அதிதியாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் (பா.உ) கலந்துகொள்ளவுள்ளார்.

தலைமை உரையை சாகித்தியரத்னா தெளிவத்தை ஜோசப் (மலையகத்தின் மூத்த எழுத்தாளர்) நிகழ்த்த, ஆய்வுரையை சட்டத்தரணி இரா. சடகோபன் (எழுத்தாளர், ஆய்வாளர், ஊடகவியலார்) நிகழ்த்துவார்.

மதிப்புரையை எழுத்தாளர் மல்லியப்புச்சந்தி திலகர் (முன்னாள் பா.உ.) நிகழ்த்த, வாழ்த்துரையை முனைவர் சதீஸ்குமார் சிவலிங்கம் (எழுத்தாளர் மற்றும் சிரேஷ்ட உப தலைவர் மலையக மக்கள் முன்னணி) நிகழ்த்துவார்.

இந்நிகழ்வில் வாழ்த்துரையை தே. செந்தில்வேலவரும் (பிரதம ஆசிரியர் - தினகரன் பத்திரிகை) வாழ்த்துரையை எஸ். ஸ்ரீகஜனும் (பிரதம ஆசிரியர் வீரகேசரி) கருத்துரைகளை கி. செல்வராஜும் (தலைவர், அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம்) தினேஸ்குமார் கார்மேகமும் நிகழ்த்துவார்கள்.

Comments