கடல் நீரலைச்சறுக்கலில் பூரண பயிற்சிபெற்ற பெண்கள் | தினகரன் வாரமஞ்சரி

கடல் நீரலைச்சறுக்கலில் பூரண பயிற்சிபெற்ற பெண்கள்

கிழக்காசியாவிலே சிறந்த “சேர்பிங்” தளமகாக விளங்கும் அறுகம்பேக்கு கடல் நீரலைச்சறுக்கலுக்ெகன்று மாத்திரமே வரும் உல்லாசப்பயணிகள் ஏராளம். இங்கு வரும் உல்லாசபயணிகளுள் பெருவாரியா னோர் “சேர்ப்பிங்கில்” பாண்டித்தியம் பெற்றவர்களாக இருந்தபோதிலும் இக்கலையில் பாண்டித்தியம் பெறாத வெளிநாட்டவர்களும் இருக்கவே செய்கின்றனர். இதேவேளை வெளிநாட்டு உல்லாசப்பயணிகள் குறிப்பாக பெண்கள் ”கடல் நீரலைச் சறுக்கல் கலையைக் கற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனாலேயே அறுகம்பேயில் பெண் ‘சேர்பிங்’ பிரியர்கள் வெளி நாட்டு அங்கீகாரம் பெற்ற ஒரு பயிற்சியாளரிடம் சேர்பிங் பயிற்சி பெற்றுள்ளனர்.

அவுஸ்திரேலிய நிதி உதவியுடன் ‘ஸ்கில்ஸ் போர் இன்ங்க்ளுசிவ் குரோத் (SKILLS FOR INCLUSIVE GROWTH)’ என்ற அமைப்பு இப்பயிற்சிநெறியை ஆரம்பித்தது.. சர்வதேச சேர்ப் சங்கத்தின் பயிற்றுவிப்பாளர் பெட்ரிக் ரிநோட் ஒன்பது பெண்களுக்கு செய்முறை பயிற்சிகளையும் மற்றும் பல்வேறு விரிவுரைகளையும் வழங்கி சிறந்த பயிற்றுவிப்பாளர்களாக ஆக்கியுள்ளார்.

ஸ்கில்ஸ் போர் இன்க்ளுசிவ் குரோவ்த்(Skills for Inclusive Growth) என்ற அமைப்பின் பிராந்திய முகாமையாளர் மரீனா உமேஷ் தலைமையில் நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் வைபவத்திற்கு பொத்துவில் பிரதேச சபையின் தலைவரும் அறுகம்பே சுற்றுலாசங்கத்தின் தலைவருமான் எம்.எச்.ஏ. ரஹீம் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கினார். சர்வதேச சேர்ப் சங்கத்தின் பயிற்றுவிப்பாளர் பெட்ரிக் ரிநோட்டும் இந்நிகழ்வுகளில் விசேட அதிதியாகக் கலந்துகொண்டார்.

இங்கு உரையாற்றிய பிராந்திய முகாமையாளர் மரீனா உமேஷ் சர்வதேச ரீதியில் மேலோங்கிவரும் இந்த ‘சேர்பிங்’ கில் பலதரப்பட்ட பெண்களும் பயிற்சிபெற முன்வந்தமை ஒரு முன்மாதியான செயற்பாடாகும்.

இதன்மூலம் அவர்கள் தமது பொருளாதாரத்தை விருத்திசெய்யவும் இது வழிவகுக்கும். சான்றிதழ் சர்வதேச அங்கீகாரம் பெற்றதாகும்.’என்றார்.

சர்வதேச சேர்ப் சங்கத்தின் பயிற்றுவிப்பாளர் பெட்ரிக் ரிநோட் தனது உரையின்போது சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற இந்த ‘சேர்பிங்’ பல சுகாதார அனுகூலங்களையும் உடலுக்கு நல்ல தெம்பையும் வழங்கும் ஒரு பொழுதுபோக்கு விளையாட்டாகும். இதன்மூலம் சகலரும் பயன்பெறவேண்டும் என்றார்.

அட்டாளைச்சேனை குறூப் நிருபர்

Comments