வருட இறுதிக்குள் வெளிநாட்டில் 3,30,000 பேருக்கு வேலைவாய்ப்பு | தினகரன் வாரமஞ்சரி

வருட இறுதிக்குள் வெளிநாட்டில் 3,30,000 பேருக்கு வேலைவாய்ப்பு

இந்த வருடத்தில் 03இலட்சத்து 30ஆயிரம் பேருக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.    2022ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், தற்போது வரையில், இரண்டு இலட்சத்து 41ஆயிரத்து 34ஐ கடந்துள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.   மத்திய வங்கியின் தரவுகளின் அடிப்படையில், நாட்டில் வருடாந்தம் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக செல்வோரின் எண்ணிக்கை பொதுவாக இரண்டு இலட்சத்து எண்பதாயிரத்திற்கும் மூன்று இலட்சத்திற்கும் இடைப்பட்டதாக காணப்படும்.    2014ஆம் ஆண்டில் 3இலட்சத்து 703பேர் வெளிநாடுகளில் வேலைவாய்பை பெற்றுள்ளனர்.

அதன்பின்னர் 2016ஆம் ஆண்டு முதல், தொழில்வாய்ப்புகளுக்கு வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை படிப்படையாக குறைவடைந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பணியகம் தெரிவித்துள்ளது. 

Comments