நாடு வழமைக்குத் திரும்ப மூன்று வருடங்கள் தேவை | தினகரன் வாரமஞ்சரி

நாடு வழமைக்குத் திரும்ப மூன்று வருடங்கள் தேவை

- யாழில் முதற் பெண்மணி மைத்திரி விக்ரமசிங்க

கொவிட் நிலைமையில் இருந்து மீள்வதற்கு எதிர்வரும் 03 வருடகாலப்பகுதி தேவையென ஜனாதிபதியின் பாரியார் முதற் பெண்மணி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க தெரிவித்தார். பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் நீண்ட வலுவாக தந்திரமான சக்தியினை உருவாக்க எதிர்காலத்தில் திட்டநடைமுறைகள் வரையப்பட்டு வருகின்றது. தன்னிறைவு அடைந்து வரும்இலங்கையில் தற்போதைய இரண்டு வருடகாலத்தில் கோவிட்19 தொற்றுப் பரவல் நிலைமை காரணமாக பாரிய பின்னடைவுகள் சகல துறைகளிலும் காணப்பட்டுள்ளன. அவ்வாறான நிலையை திறம்பட மாற்றுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது என்றார்.

புதிய இயல்பு நிலையில் எதிர்காலத்தைச் செழுமைப்படுத்தல் ( Shaping the Future in the New Normal) என்ற தொனிப் பொருளில் நடத்தப்பட்டு வரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சர்வதேச ஆய்வு மாநாடு தொடரில், பல்கலைக்கழக பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவ நிலையத்தினால் “பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் ஊடாகப் புதிய இயல்பு நிலையில் நிலைபேறான அபிவிருத்தியை அடைதல்” என்ற தலைப்பிலான ஆய்வு மாநாடு (28) கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது.

இந்த ஆய்வு மாநாட்டின் முதன்மை உரையாளராக,பேராசிரியர் மைத்திரீ விக்கிரமசிங்கே கலந்து கொண்டு முதன்மை உரை ஆற்றினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலத்தை பின்பற்றாது எதிர்காலத்தில் வலுமையுள்ள சமூக கட்டமைப்பை உருவாக்க சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றதென்றார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்த முதல் பெண்மணியை யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ் ஸ்ரீசற்குண ராஜா வரவேற்றார்.

பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் ஊடாகப் புதிய இயல்பு நிலையில் நிலைபேறான அபிவிருத்தியை அடைதல் தொடர்பான 24 ஆய்வுகட்டுரையும்,12 உபதலைப்புகளுடான ஆய்வுக் கட்டுரைகள் முன்மொழிவுகள் முன்னெடுக்கப்பட்டன.

இதில் கொழும்பு, களனி, யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விப் புலமையாளர்கள், மாணவ மாணவிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Comments