தோட்ட சேவையாளர்கள் சங்கத்தின் கூட்டு ஒப்பந்தம் | தினகரன் வாரமஞ்சரி

தோட்ட சேவையாளர்கள் சங்கத்தின் கூட்டு ஒப்பந்தம்

தோட்ட சேவையாளர்கள் சங்கத்தின் கூட்டு ஒப்பந்தம் இன்று பாரிய சிக்கலுக்குள்ளாகியுள்ளது. தோட்ட சேவையாளர்கள் சங்கமும் முதலாளிமார் சம்மேளனமும் 1948 ஆம் ஆண்டு ஜனவரி முதல் இன்றுவரை சுமார் 74 வருடங்களாக அதாவது இலங்கைக்கு சுதந்திரம் கிடைந்த நாள் முதல் இந்த கூட்டு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
 
மூன்று வருடங்களுக்கு ஒருமுறை சம்பள உயர்வு மற்றும் இதர சேம நலன்கள் தொடர்பில் இக் கூட்டு உடன்படிக்கையில் உள்வாங்கப்பட்டுள்ளன. 2022 செப்டெம்பர் மாதம் 30ம் திகதியுடன் கூட்டு ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் புதிய உடன்படிக்கைக்கான, பேச்சுவார்த்தைகள் நான்கு கட்டங்களால் நிறைவடைந்த நிலையில் முதலாளிமார் சம்மேளனம் உடன்பாட்டுக்கு வரவில்லை.
 
சேவையாளர்கள் சமர்ப்பித்துள்ள கூட்டு உடன்படிக்கையிலுள்ள திட்டத்திற்கு முதலாளிமார் சம்மேளனம் உடன்படவில்லை. நான்கு பேச்சுவார்த்தை மட்டங்களிலும் அவர்களின் உடன்படிக்கையிலுள்ள யோசனைகளுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. தட்டிக் கழித்தே வந்தனர் என தோட்ட சேவையாளர்கள் சங்கத்தின் தலைவர் நிசாந்த வன்னியாராச்சி தெரிவித்தார்.
 
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த தலைவர்,..
 
தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி ஒவ்வொரு குடிமகனின் கழுத்தை நெரிக்கும் நிலையில் உள்ளது. நான்கு உறுப்பினர்கள் இருக்கும் ஒரு குடும்பத்தினருக்கு வாழ்வதற்காக 107,000 ரூபா மாதம் தேவைப்படுகிறது. பணவீக்கம் 95 வீதம் அதிகரித்திருப்பதாக புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன. இவ்வாறான சூழலில் எமது சம்பள உயர்வு கோரிக்கை நியாயமானதாக தென்படுகிறது. அதுவும் நாம் ஒப்பந்தத்தின் படியே கோரிக்கையை முன்வைத்துள்ளோம். எமது சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடி உயர்பீட ஆலோசனைப்படியே கூட்டு ஒப்பந்த உடன்படிக்கையை தயாரித்துள்ளோம்.
 
நாம் 45 சதவீத சாதாரண சம்பள அதிகரிப்பும் ஏனைய விடயங்கள் தொடர்பிலே பேச்சுவார்த்தையை ஆரம்பித்தோம். ஆனால் சம்மேளனம் ஆரம்பத்திலிருந்தே எமது கோரிக்கைகளை கபளீகரம் செய்தே வந்தது. நான்கு கட்ட பேச்சுவார்த்தைகளில் அவர்கள் எந்த வித சிறு இணக்கப்பாட்டுக்கும் வரவில்லை. இதன் பின்னணியிலேயே ஒக்டோபர் முதலாம் திகதி தலவாக்கல்லையில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தினோம். அந்த ஆர்ப்பாட்டத்தில் அநேக பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
 
அப்போராட்டம் சம்மேளனத்திற்கு சிறு அழுத்தம் கொடுத்திருந்தது என நினைக்கிறேன். ஏனென்றால் முதலாளிமார் சம்மேளனம் தன்னிச்சையாக 25% சம்பள உயர்வை சில பெருந்தோட்டக் கம்பனிகள் வழங்கியுள்ளது. 22 கம்பனிகளில் 10 கம்பனியினர் 25% சம்பள உயர்வை வழங்கியுள்ளனர். இவ்வாறான முன்னேற்றமற்ற செயற்பாடுகளால் எமது சங்கத்தை பிரித்து அவர்களின் குரூர எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ள நினைக்கின்றனர். 14,000 உறுப்பினர்களைக் கொண்ட எமது சங்கத்தினரை பிரித்தாள நினைக்கின்றனர். இப்படியான உள்குத்தல்களில் முதலாளிமார் சம்மேளனம் தாம் நினைத்ததையே செய்ய முயற்சிக்கின்றனர். இம்முயற்சி பெருந்தோட்டத் துறையை முடக்கக்கூடிய சந்தர்ப்பத்தை உருவாக்கும் என நான் எச்சரிக்கிறேன்.
 
தோட்டத் தொழிலாளர் கூட்டு ஒப்பந்தத்திலும் தொழிற் சங்கங்களை பிரிந்து அதன் பலத்தை பலவீனமடையச் செய்து, இலாபத்தை குறிக்கோளாகக் கொண்ட கம்பனிகள் தங்களின் தந்திரோபாய செயற்பாடுகளால் தோட்ட சேவையாளர்கள் சங்கத்தை பலவீனப்படுத்த நினைக்கின்றது. அது எவ்விதத்திலும் சாத்தியப்படப் போவதில்லை.
 
இன்று நாட்டில் அனைத்து துறையினருக்கும் சம்பளம் அத்தியாவசிய தேவையாகும். சில பொருட்களின் விலை 300 மடங்கு அதிகரித்துள்ளது. இன்று 1 இலட்சம் ரூபாவுக்கு வாங்கிய அத்தியாவசியப் பொருட்களின் முந்தைய பெறுமதி 30 ஆயிரம் ரூபாவாகும். அவ்வாறென்றால் சம்பள உயர்வின்றி மக்கள் வாழ முடியுமா? என்ற வினாவுக்கு அரசே பதில் தரவேண்டும். நாம் மீண்டும் மீண்டும் சம்மேளனத்திற்கு வலியுறுத்துகிறோம்.
 
எமது கோரிக்கைகளை செவிசாய்க்கவில்லை என்றால் எம்முடன் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்துள்ளன.தொழிற்சங்க கூட்டமைப்புடன் இணைந்து மாபெரும் போராட்டத்தை நடத்துவோம். கொரோனா காலத்தில் அனைத்து துறைகளும் முடக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் பெருந்தோட்டத் துறையும் ஆடை உற்பத்தியுமே எந்தவித தடங்கலும் இன்றி செயற்பட்டன. இவற்றில் பெருமளவான இலாபம் அந்நிறுவனங்களுக்கு கிடைத்திருக்கின்றன. அத்தோடு அமெரிக்க டொலரின் அதிகரிப்பு அதன் இலாபத்தில் தாக்கம் செலுத்தியுள்ளன. ஏன் அந்த இலாபத்தில் சிறுதொகையை ஊழியர்களுக்கு ஒதுக்க முடியாது?
 
ஸ்ரீ

Comments