Home » கேரளா சர்வதேச திரைப்படவிழாவில் முள்ளியவளை கலைஞரின் குறும்படம்

கேரளா சர்வதேச திரைப்படவிழாவில் முள்ளியவளை கலைஞரின் குறும்படம்

by admin
September 2, 2023 3:16 pm 0 comment

International Documentary & Short Film Festival of Kerala என்பது இந்தியாவின் கேரளாவில் நடைபெறும் ஓர் முக்கியமான திரைப்படவிழா ஆகும். இந்த திரைப்படவிழா கடந்த பதினைந்து ஆண்டுகளாக கேரளாவில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்தத் திரைப்பட விழாவானது கேரளாவில் நடைபெறும் International Film Festival of Kerala (IFFK) இன் ஒரு பகுதியாக குறும்படம் மற்றும் ஆவணப்படத்துக்கு என்று நடத்தப்படும் ஒரு திரைப்படவிழா ஆகும்.

International Film Festival of Kerala (IFFK) என்பது இந்தியாவிலேயே 27 ஆண்டுகளாக நடைபெறும் இரண்டாவது முக்கியமான ஒரு திரைப்பட விழா என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நடந்த International Film Festival of Kerala (IFFK) இல் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த உலக சினிமாவில் மிகவும் முக்கிய பங்கு ஆற்றிய பேலா டார்(Bela Tarr) கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

அத்தோடு, International Documentary & Short Film Festival of Kerala இல் வெவ்வேறு பிரிவுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் வருடந்தோறும் கலந்து கொள்கின்றன. அதில் சர்வதேச பகுதி (International Section) என்பது இந்தியா அல்லாத மற்றைய நாட்டு குறும்படங்கள் கலந்து கொள்ளும் ஒரு பகுதியாகும்.

இந்த வருடம் பதினைந்தாவது International Documentary & Short Film Festival of Kerala இல், 53 குறும்படங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. அவற்றில் அமெரிக்கா, ஈரான், சீனா, இஸ்ரேல், ஹங்கேரி, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் சில நாடுகளின் படங்களுடன் இலங்கை சார்பாக எங்களது குறும்படம் ‘எல்லையற்று விரிகிறதோர் இரவு’ தெரிவாகியுள்ளது.

இக்குறும்படத்தை முல்லைத்தீவு, முள்ளியவளையில் வசிக்கும் வேல்ராஜா சோபன் என்பவர் எழுதி தயாரித்து இயக்கியுள்ளார். இந்தக் குறும்படம் சிறிய பொருட்செலவுடன், நண்பர்களின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்டது. நாளை 4ஆம் திகதி கேரளாவில் உள்ள KAIRALI SREE NILA திரையங்கில், காலை 11 மணிக்கு International Documentary & Short Film Festival of Kerala சார்பில் திரையிடப்பட இருக்கிறது.

இந்தக் குறும்படம் வேலை முடிந்து இரவில் கணவனுக்காக வீதியில் காத்திருக்கும் ஒரு பெண்ணுக்கு நடக்கும் Mental Rape பற்றியது. இந்தக் குறும்படத்தில் ராசையா லோகநாதன், செல்வராஜ் லீலாவதி மற்றும் ஜெனோஷன் ஜெயரட்ணம் முதன்மை கதாபாத்திரங்களாக நடித்து இருக்கிறார்கள். ரிஷி செல்வம் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு மற்றும் உதவி ஒளிப்பதிவாளராக திலீப் லோகநாதனும், உதவி இயக்குனர் மற்றும் Co – Writer ஆக புவனேஷ்வரன் பிரஷாந்த என்பவரும், இரண்டாவது உதவி இயக்குனாராக Rj பெனயா என்பவரும், கள உதவியாளராக காந்தரூபன் என்பவரும், Foley & Sound Mix புவனேந்திரன் பிரணவன் என்பவரும் பணியாற்றியுள்ளனர்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division