1.6K
இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் சினோபெக் நிறுவன எரிபொருட் விலை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில்,
- பெற்றோல் 92: ரூ. 358
- பெற்றோல் 95: ரூ. 414
- டீசல் ரூ. 338
- சுப்பர் டீசல் ரூ. 356
- மண்ணெண்ணெய் ரூ. 231
என விற்பனை செய்ய சினோபெக் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
சீனாவின் சினோபெக் எனர்ஜி லங்கா நிறுவனம் தமது உத்தியோகபூர்வ முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை கொழும்பில் உள்ள மத்தேகொடவில் திறந்து வைத்துள்ளது.
நள்ளிரவு (01) முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகள் பின்வருமாறு அதிகரிப்பதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்திருந்தது.
- பின்வருமாறு அவ்வதிகரிப்பு அமைகின்றது
- பெற்றோல் ஒக்டேன் 92: ரூ. 348 இலிருந்து ரூ. 13 இனால் அதிகரிப்பு (ரூ. 361)
- பெற்றோல் ஒக்டேன் 95: ரூ. 375 இலிருந்து ரூ. 42 இனால் அதிகரிப்பு(ரூ. 417)
- ஒட்டோ டீசல்: ரூ. 306 இலிருந்து ரூ. 35 இனால் அதிகரிப்பு (ரூ. 341)
- சுப்பர் டீசல்: ரூ. 358 இலிருந்து ரூ. 1 இனால் அதிகரிப்பு (ரூ. 359)
- மண்ணெண்ணெய்: ரூ. 226 இலிருந்து ரூ. 5 இனால் அதிகரிப்பு (ரூ. 231)
அதே போன்றே LIOC நிறுவனமும் அவ்விலை அதிகரிப்பை பேணுவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.