Home » கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பயின்று முதன்முதலாக விமானப்படையின் தளபதியாகிய எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பயின்று முதன்முதலாக விமானப்படையின் தளபதியாகிய எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ

by admin
September 2, 2023 12:36 pm 0 comment

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வரலாற்றில் முதன் முதலாக அங்கு பயின்று விமானப்படைத் தளபதியாகி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ வரலாறு படைத்தார். அவருக்கான கௌரவிப்பு நிகழ்வு அண்மையில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இராணுவ மற்றும் சிவில் அரசாங்க சேவைக்காக தம்மை அர்ப்பணித்தவர்களுக்காக வழங்கப்படும் கௌரவமான Hall of Fame கௌரவர்களில் தற்போதைய விமானப்படைத் தளபதியும் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

அவர் அங்கு அமைந்துள்ள போர்வீரர்களின் நினைவுத்தூபியில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியதுடன், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவர்களுக்கான விசேட விரிவுரையையும் நிகழ்த்தினார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த் பீரிஸ் அவர்களை விமானப்படைத் தளபதி சந்தித்து சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டதுடன், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள் ஆர்.ஏ.டி.சோமதிலக்க ராஜபக்ஷ மற்றும் திருமதி வி.பி.பிரேமாவதி ஆகியோரின் புதல்வர் ஆவார். அவர் தனது ஆரம்பக் கல்வியை கம்பஹா பண்டாரவத்த பராக்கிரம கல்லூரியில் ஆரம்பித்து, பின்னர் கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியில் இணைந்து கொண்டார். இடைநிலைக் கல்வியை கொழும்பு ஆனந்த வித்தியாலயத்தில் பயின்றார். 1988 ஆம் ஆண்டு ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இணைந்து கொண்டார். கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் முப்படைகளின் அதிகாரிகளில் இருந்து விமானிகளைத் தெரிவு செய்வதற்கான திறன் பரீட்சையில் சித்தியடைந்ததன் பின்னர், அனுராதபுரம் விமானப்படையின் அடிப்படை விமானப் பயிற்சிக்கான படைத் தளமான இலக்கம் 01 விமானப் பயிற்சிப் பிரிவின் கீழ் இல 33 விமான கெடட் அதிகாரி பாடநெறி மூலம் தனது ஆரம்ப விமான பயிற்சியை மேற்கொண்டார். அதன் பின்னர் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் மின்பொறியியல் பட்டம் பெற்று இலங்கை விமானப்படையில் விமானியாகச் சேர்ந்தார்.

தனது சேவையின் போது,எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மிகவும் திறமையான ஒரு போர் விமானியாக இருந்தார். PUCARA விமானத்தை செலுத்திய அவர் போக்குவரத்து விமானியாக CESSNA-150, Y-12 (Y-12) Avrokhmashetiti-260TP Bichicraft-200T AN 32 (Antono-32) மற்றும் C-130 ஆகிய விமானங்களையும் ஓட்டியுள்ளார்.

இலங்கை விமானப்படையில் விமானி ஒருவர் பெறக்கூடிய மிக உயர்ந்த பதவியான மாஸ்டர் கிரீன் பட்டத்தை பெற்றுள்ள எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, சிவில் விமான போக்குவரத்து உரிமம் மற்றும் வணிக விமானப் போக்குவரத்து பைலட் உரிமம் (ATPL) என்பவற்றை வைத்திருப்பவர் ஆவார். அவர் 7000 இற்கும் மேற்பட்ட மணிநேரம் விமானத்தில் விமானியாக பயணம் செய்த அனுபவம் கொண்டவராவார்.

அமெரிக்காவில் உள்ள அலபமா வான் பல்கலைக்கழகத்தில் இராணுவ அறிவியல் முதுகலை பட்டமும், லண்டன் கிங்ஸ் கல்லூரியில் சர்வதேச பாதுகாப்பு மற்றும் மூலோபாய முதுகலை பட்டமும் முதன்மை சித்தியும் பெற்றார். அமெரிக்காவின் புகழ் பெற்ற அலாபமா விமானப்படை வான் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் பழைய மாணவரும் psc ஆவார். அவர் ஐக்கிய ராஜ்யத்தின் ​ேராயல் பாதுகாப்புக் கல்வி கல்லூரியில் சிறப்பு சர்வதேச பாதுகாப்பு கல்வி மற்றும் யுக்தி பயிற்சி நெறி இணையும் நிறைவு செய்துள்ளார்.

ரணசூர பதக்கம் மூன்று முறை பெற்றார். அத்தோடு விசிட்ட சேவா விபூஷன பதக்கம் உத்தம சேவா பதக்கம் ஆகியவற்றை பெற்றுள்ளார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division