உலக குடியிருப்பு தினம் எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி கொழும்பில் கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள சித்திரம், – கட்டுரைப் போட்டிகளில் பங்குபற்ற நாட்டின் உள்ள சகல பாடசாலை மாணவ, மாணவிகளுக்ளிடமிருந்து ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாட்டினை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மேற்கொண்டுள்ளது.
உலக குடியிருப்பு தினம்_2023 சம்பந்தமாக கட்டுரை, சித்திரம் வரைதல் போட்டிகளுக்கு பின்வரும் நான்கு தலைப்புக்களில் பங்குபற்றலாம். தமிழ் அல்லது சிங்கள மொழி மூலம் ஆக்கங்களை அதிபர் ஊடாக உறுதிப்படுத்தி தேசிய வீடமைப்பு தலைமைக் காரியாலயத்திற்கு அனுப்பி வைக்க முடியும்.
1. எமது எதிர்கால குடியிருப்பு, 2. நகரமொன்றில் எதிர்கால வீடமைப்பில் இளைஞர்களின் பங்களிப்பு, 3.ஆரோக்கியமான நகர வாழ்வுக்கு திட்டமிடப்பட்ட குடியிருப்பு, 4.பாதுகாப்பான மனித குடியிருப்பின் மூலம் எதிர்கால நகர உருவாக்கம்.
மேற்குறிப்பிட்ட ஒரு கருத்தை அல்லது சகல கருத்துக்களையும் உள்ளடக்கியதாக தமது சித்திரம் அல்லது கட்டுரையை 2023 ஓகஸ்ட் 31 ஆம் திகதிக்கு முன்னர் தேசிய வீடமைப்பு அதிகார சபை தலைமைக் காரியாலயம் அல்லது மாவட்ட வீடமைப்புக் காரியாலயங்களில் ஒப்படைக்க முடியும்.
சித்திரம் வரைதல் முதலாம் பிரிவு தரம் 3 – தொடக்கம் தரம் 5 வரை ஆகும். இரண்டாவது பிரிவு தரம் 6 தொடக்கம்- தரம் 9 வரை ஆகும். மூன்றாம் பிரிவு தரம் 10 – முதல் தரம் 13 வரை ஆகும்.
வெற்றியாளர்களுக்கு 2023 உலக குடியிருப்பு தின வைபவம் ஒக்டோபர் 2 ஆம் திகதி கொழும்பில் நடைபெறும் போது பிரதம அதிதிகளினால் பரிசுகள் வழங்கி வைக்கப்படும்.
மேற்படி போட்டிக்குரிய விண்ணப்பங்களை www.nhda.gov.lk என்ற இனையத்தளத்தின் ஊடாகவும் பெற்றுக் கொள்ள முடியும். அல்லது தேசிய வீடமைப்பு தலைமைக் காரியாலயம், உதவிப் பொது முகாமையாளர், தகவல் மற்றும் பிரசாரப் பிரிவு, கொழும்பு 2 என்ற முகவரியுடன் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற முடியும்.- தொலைபேசி. 011_2447038
(அஷ்ரப் ஏ சமத்)