ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், அரசாங்க ஆதரவு கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது.
நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பில், இச்சந்திப்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர,இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க ஆகியோர் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றுள்ளனர். இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாடு தொடர்பிலும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்