ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் இடம்பெற்ற உலக பாதுகாப்பு சேவைகள் செவன்ஸ் ரக்பி தொடரில் இலங்கை பாதுகாப்பு சேவைகள் ரக்பி அணி மூன்றாம் இடத்தை வென்றது.
கடந்த ஓகஸ்ட் 27 ஆம் திகதி நிறைவடைந்த இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்காவை வீழ்த்தி போட்டியை நடத்தும் ரஷ்யா சம்பியன் கிண்ணத்தை வென்றது. இதில் பெலாரஸ், பங்களாதேஷ் போன்ற நாடுகளும் பங்கேற்றன.
இலங்கை பாதுகாப்பு சேவைகள் ரக்பி அணி சார்பாக இலங்கை விமானப்படை வீரர்கள் 4 பேருடன், இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை வீரர்கள் அடங்கலாக 13 வீரர்கள் பங்குபற்றினர் .
பாதுகாப்பு சேவை ரக்பி அணியின் தலைவராக இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த அஷான் பண்டார செயற்பட்டதோடு இலங்கை கடற்படையின் கொமடோர் பிடிகல மொத்த குழுத்தலைவராகவும், அணியின் முகமையாளராக பிரிகேடியர் டி.கே. அலுத்தெனிய ஆகியோரும் செயற்பட்டனர்.