Home » இத்தாலியில் ரயில் மோதி ஊழியர் ஐவர் உயிரிழப்பு

இத்தாலியில் ரயில் மோதி ஊழியர் ஐவர் உயிரிழப்பு

by admin
September 2, 2023 2:43 pm 0 comment

இத்தாலி ரயில் நிலையம் ஒன்றில் அதிவேக ரயில் ஒன்று ரயில்வே பணியாளர்கள் மீது மோதிய விபத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

வடக்கு நகரான டூரினில் ரயில் தண்டவாளத்தின் பாகங்களை மாற்றிக்கொண்டிருக்கும்போதே ரயில் வண்டி மோதியுள்ளது. இதில் 22 மற்றும் 52 வயதுக்கு இடைப்பட்ட ஊழியர்களே கொல்லப்பட்டுள்ளனர்.
டூரின் மற்றும் மிலானுக்கு இடைப்பட்ட ரயில் பதையில் இவர்கள் பணியாற்றிக்கொண்டிருந்த வேளை பயணிகள் இன்றி அந்த ரயில் மணிக்கு 160 கிலோமீற்றர் வேகத்தில் வந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக நகர மேயர் போலோ பொடோனி தெரிவித்துள்ளார்.

இதன்போது இரு ஊழியர்கள் காயமடையாதபோதும் அவர்கள் மருத்துவ சோதனைக்காக உடன் வைத்திய சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

ரயில் ஓட்டுநர் அதிர்ச்சியுற்ற நிலையில் சிகிச்சை பெற்று பின்னர் வீட்டுக்கு திரும்பியுள்ளார். அவர் விபத்துத் தொடர்பில் பின்னர் விசாரணைக்கு முகம்கொடுக்கவுள்ளார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division