ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மனிதநேயம் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 14ஆவது வித்யோதய சாகித்திய விருது வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (01) பிற்பகல் பல்கலைக்கழக சுமங்கலா மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் 2022ஆம் ஆண்டின் சிறந்த நாவலாக மனோஹரி ஜயலத்தின் ‘கிரிஜா’ நாவல் விருதை வென்றது.
இந்த நிகழ்வுக்கான அச்சு ஊடக அனுசரணையை லேக்ஹவுஸ் நிறுவனம் வழங்கியிருந்தது.
‘கிரிஜா’ நாவலுக்கான விருதை அதன் ஆசிரியர் மனோஹரி ஜெயலத்துக்கு ‘சரசவி’ புத்தக நிறுவனத்தின் தலைவர் எச்.டி.பிரேமசிறி வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான சிரேஷ்ட பேராசிரியர் பத்மலால் மானகே பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
மனிதநேயம் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி, பேராசிரியர் ஷிராந்த ஹீன்கெந்த, லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் ஹரேந்திர காரியவசம் ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.