அமானா வங்கி தனது எதிர்வரும் உரிமைப் பங்கு வழங்கல் தொடர்பான திகதிகளை கொழும்பு பங்குப்பரிவர்த்தனைக்கு அறிவித்துள்ளது. அதன் பிரகாரம், 2023 செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள விசேட பொதுக்கூட்டத்தின் போது 1:1 விகிதாசார உரிமைப் பங்கு வழங்கல் தொடர்பில் பங்குதாரர்களின் ஏற்பளிப்பை பெற்றுக் கொள்வதற்கு வங்கி எதிர்பார்த்துள்ளது. செப்டெம்பர் 22ஆம் திகதிக்கு XR திகதியானது நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், பதிவு செய்தல் மற்றும் தற்காலிக ஒதுக்கீடுக்கான திகதியாக செப்டெம்பர் 26ஆம் திகதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்காலிக ஒதுக்கீடு பற்றிய கடிதங்களை ஒக்டோபர் 5ஆம் திகதியளவில் அனுப்பி வைப்பதற்கு வங்கி எதிர்பார்த்துள்ளது. உரிமைப் பங்கு வழங்கல் வியாபாரம் ஒக்டோபர் 11 ஆம் திகதிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், CDS க்கு அதிகாரத்துறப்புக்கான இறுதித் திகதி ஒக்டோபர் 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உரிமைப் பங்கு வழங்கலுக்கான ஏற்றுக் கொள்ளல் மற்றும் கொடுப்பனவுகளை ஒக்டோபர் 24 வரை ஏற்றுக்கொள்ளும். இந்த உரிமைப் பங்கு வழங்கலினூடாக ரூ. 6.7 பில்லியனை பங்கு மூலதனமாக திரட்டுவதற்கு அமானா வங்கி எதிர்பார்த்துள்ளது.
வங்கியின் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாக இது அமைந்துள்ளது. பங்கொன்றுக்கு ரூ. 2.30 வீதம், மொத்தமாக 2,902,267,365 சாதாரண வாக்குரிமை பங்குகளை வங்கி வழங்க எதிர்பார்த்துள்ளது.