ஹம்பாந்தோட்டையெங்கும் கடந்த ஆறு மாத காலத்திற்கு மேலாக நிலவிவந்த உஷ்ணமான மற்றும் வரட்சியான காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு தற்பொழுது அடை மழைபெய்து வருவதினால் மக்களது அன்றாட வாழ்க்கை ஸ்தம்பிதமடைந்துள்ளது.
ஹம்பாந்தோட்டையெங்கும் கடந்த ஆறு மாத காலத்திற்கு மேலாக நிலவிவந்த உஷ்ணமான மற்றும் வரட்சியான காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு தற்பொழுது அடை மழைபெய்து வருவதினால் மக்களது அன்றாட வாழ்க்கை ஸ்தம்பிதமடைந்துள்ளது.
கடந்த காலங்களில் வரட்சியான காலநிலையின் காரணமாக பல்வேறு பிரதேசங்களிலும் மக்கள் குடிநீர் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்ததோடு விவசாயிகளும் விவசாயத்திற்கு போதியளவு நீர் இன்றி பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.
குடிநீர், விவசாயத்திற்கு தேவையான நீரைப் பெற்றுக் கொடுக்கும் பிரதான குளங்களும் வற்றிப்போயிருந்தன. மிருகங்களும் நீர் மற்றும் புற்கள் இன்றி உணவைபெறுவதில் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வந்தன.
தற்பொழுது ஹம்பாந்தோட்டையெங்கும் கடந்த சிலதினங்களாக நீண்டகால இடைவெளிக்குப்பிறகு அடை மழை பெய்து வருகிறது. இதனால் வற்றிப் போயிருந்த குளங்களிலும் நீர்நிறைய ஆரம்பித்துள்ளன. அத்தோடு பெரும் போகத்திற்கான நெல் அறுவடை ஆரம்பித்துள்ளதினால் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. சந்தையில் அரிசியின் விலை அதிகரித்துள்ளதோடு மரக்கறி வகைகளின் விலைகளும் குறைந்து காணப்படுகிறது.
மீன்பிடி மற்றும் உப்பு உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாக மக்கள் தங்களது அன்றாடசெயற்பாடுகளில் ஈடுபடும் போது பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.