1.7K
குருநாகல் தம்பதெனிய அல் ஹிஜ்ரா வித்தியாலயத்தில் குவைத் நாட்டின் நன்கொடை நிதியின் மூலம் புதிய வகுப்பறைக் கட்டடத்திற்கான அடிக்கல் நடும் வைபவம் சனிக்கிழமை (09) கல்லூரி அதிபர் திருமதி எம்.எஸ்.எப் சிபானா தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக குருநாகல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரனி தயாசிறி ஜயசேகர மற்றும் குவைத் நாட்டின் இலங்கைத் தூதரக பிரதிநிதி அஷ்ஷெய்க் எம். பிர்தௌஸ், அல்ஹிமா இஸ்லாமிய நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஏ.ஏ. நுாறுல்லா (நளீமி) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.