Home » மொரோக்கோவில் பாரிய நிலநடுக்கம்

மொரோக்கோவில் பாரிய நிலநடுக்கம்

by admin
September 10, 2023 5:32 pm 0 comment

வட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான மொரோக்கோவில் ஏற்பட்ட சத்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரையில் 920 பேர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு உட்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6.8ஆக பதிவாகியதுடன், இந்த நிலநடுக்கத்தால் முதலில் 296 பேர் உயிரிழந்ததாகவும், முன்னதாக அந்நாட்டு அரசாங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மராகேஷுக்கு தென்மேற்கே 71 கிலோமீற்றர் (44 மைல்) தொலைவிலுள்ள ஹை அட்லஸ் மலைகளில் 18.5 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்நாட்டு உள்ளூர் நேரப்படி 23:11 மணிக்கு (இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை 3:40) நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பாதிப்புகள், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கப்படலாமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division