ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ், “BreastOber” மூலமாக விழிப்புணர்வைப் பரப்பி, உயிர்களைக் காக்கும் முயற்சியில், மமோகிராம் பரிசோதனைகளுக்கு 30% சேமிப்பை வழங்குகின்றது.
மார்பக புற்றுநோய் என்பது உலகளவில் காணப்படுகின்ற ஒரு பிரச்சினை. அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரித்து வருகின்ற இந்த நிலைமைக்கு இலங்கை விதிவிலக்கு கிடையாது.
உலகளவில் 14 செக்கன்களுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு வருவதுடன், 100% குணமடைவதற்கு ஆரம்பகட்டத்திலேயே இதனைக் கண்டறிதல் மிகவும் முக்கியமானது. 2020ஆம் ஆண்டில் உலகளவில் 2.3 மில்லியன் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 685,000 பேர் தமது உயிர்களை இழந்துள்ளமையாலும், இதற்கு தேவையான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படல் வேண்டும்.
இலங்கையில் 2019 ஆம் ஆண்டில் மாத்திரம் 4,500 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளமை புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இப்பிரச்சினையின் பாரதூரத்தைப் புரிந்துகொண்டு ஆண்டுதோறும் ஒக்டோபர் மாதத்தில் அனுட்டிக்கப்பட்டு வருகின்ற மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தில் “BreastOber” என்று அழைக்கப்படுகின்ற விசேட விழிப்புணர்வு முயற்சியின் மூலமாக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ் முன்வந்துள்ளது.
ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸிலுள்ள உடலுக்கு வேதனையை ஏற்படுத்தாத மமோகிராம் தொழில்நுட்பத்தின் துணையுடன், ஆரம்ப கட்டத்திலேயே இதனைக் கண்டறிய வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். இந்த பரிசோதனையை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் எவ்விதமான அசௌகரியங்கள் தொடர்பாகவும் பெண்கள் அச்சம் கொள்ளத் தேவையற்ற ஒரு அதிநவீன தொழில்நுட்பமாக இந்த முறை காணப்படுகின்றது.