Home » நேபாளத்தில் ஏன் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது?

நேபாளத்தில் ஏன் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது?

by Damith Pushpika
November 5, 2023 6:56 am 0 comment

நேபாளத்தில் நேற்றுமுன்தினம் இரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 160ஆக அதிகரித்துள்ளது.

பூமிக்கடியில் இருக்கும் நிலத் தகடுகள் அதிகம் நகரும் இடத்தில் நேபாளம் இருப்பதால் அடிக்கடி இங்கு நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். கடந்த 2015ம் ஆண்டு 7.8 ரிச்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது.

இதில் சுமார் 8000 பேர் உயிரிழந்தனர். அதேபோல 21 ஆயிரம் பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து தொடர்ந்து அவ்வப்போது லேசான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வந்திருக்கின்றன. கடந்த ஒக்டோபர் மாதத்திலும் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.

நேற்று முன்தினம் இரவும் 6.4 ரிச்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக கட்டடங்கள் சில குலுங்கி சரிந்துள்ளன.

அதேபோல இரவு 11 மணிக்கு மேல் நிலநடுக்கம் உணரப்பட்டதால் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த மக்கள் சிலர் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.நேபாளம் சுமார் 80 ஆண்டுகளாக நிலநடுக்கங்களை சந்தித்து வருகிறது.

மிதமானது முதல் மிகக்கடும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலநடுக்கம் வரை ஏராளமான வகைகளையும் சந்தித்துள்ளது. ஆனால் ஏன் நேபாளத்தில் இத்தனை நிலநடுக்கங்கள் வருகின்றன?

பூமியின் மேலோடு பெரிய டெக்டோனிக் தகடுகளால் ஆனது. சில நேரங்களில் முழு கண்டங்களையும் உள்ளடக்கிய இந்த நிலப்பரப்புகள், தொடர்ந்து நகர்ந்து ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டிருக்கின்றன. ஒரு சில தகடுகள் சேரும். ஒரு சில தகடுகள் விலகும். இந்த இரண்டு செயலாலும் புவியியல் மாற்றங்கள் உண்டாகும்.

இமயமலை. இந்தியா, நேபாளம், சீனா, பாகிஸ்தான் நாடுகளில் பரவியிருக்கும் இந்த மலை புவியியலில் சொல்லப்படும் 2 டெக்டோனிக் தட்டுகளின் இணைவால் ஏற்படுகிறது. ஐரோப்பிய-

ஆசிய மற்றும் இந்திய தட்டு இணையும் இடத்தில் அதன் அழுத்தம் காரணாமாக நிலம் மேல்நோக்கி வளர்ந்து வருகிறது.

2 தட்டுகளும் ஒன்றின் மேல் மற்றொன்று அழுத்தம் கொடுப்பதால் இந்த இணைவுப் பகுதியில் நிலம் நகர்வுகளுக்கு உட்படும். எரிமலை வெடிப்பு, நிலநடுக்கம் முதலானவை ஏற்படும். இந்த 2 தட்டுகள் இணையும் இடத்தில் நேபாளம் அமைந்துள்ளது. இந்த 2 தட்டுகளும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 செமீ என்ற விகிதத்தில் ஒன்றுக்கொன்று எதிராகவும் கீழும் அழுத்திக்கொள்கின்றன.​

இந்த டெகடோனிக் தட்டுகளின் அழுத்தத்தால் கீழ் அடுக்கில் உராய்வும் மோதலும் நடைபெறும். அதை மையம் என்று சொல்வர். அந்த மோதலின் தாக்கம் நிலத்தில் மேற்பரப்பை அடையும் போது நிலநடுக்கம் உணரப்படும். நிலம் உறுதியாக இருந்தால் பாதிப்பு குறைவாக இருக்கும். நேபாளம் மலை பிரதேசம் என்பதால் ஸ்திரத்தன்மை விரைவாக குலையும் தன்மை கொண்டதாக இருக்கிறது. நேபாளத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட காத்மாண்டு பள்ளத்தாக்கின் அடியில் 300 மீட்டர் ஆழமான களிமண் அடுக்கு உள்ளது. இது பள்ளத்தாக்குக்குள் நிலநடுக்கத்தின் நில அதிர்வு அலைகளை பிரதிபலிக்கிறது மற்றும் தீவிரப்படுத்துகிறது. இதன் விளைவாக மண் திரவமாக்கல் என்று அழைக்கப்படுகிறது. அதிர்வுகள் திடமான நிலத்தை புதைமணல் போன்றவற்றுக்கு மாறும் போது இது நிகழ்கிறது.

கீழடுக்கு முதல் மண் புரள்வதால் அது மேலே வரும் பொது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நிலத்தில் விரிசல் ஏற்படுவது, கட்டடங்கள் வீழ்வது, கோபுரங்கள் சரிவது, புதிய பள்ளங்கள், மேடுகள் உருவாவது போன்றவற்றைப் பார்க்க முடியும்.

அபி

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division