Home » அனைத்து மக்களின் வாழ்விலும் இன்பமும் நலமும் உண்டாகட்டும்

அனைத்து மக்களின் வாழ்விலும் இன்பமும் நலமும் உண்டாகட்டும்

by Damith Pushpika
November 12, 2023 6:10 am 0 comment

“உலகெங்கிலும் உள்ள இந்து மக்களால் கொண்டாப்படும் பண்டிகைகளில் தீபாவளிப் பண்டிகை முக்கிய இடத்தை வகிக்கின்றது. எமது மனதினுள் இருக்கும் தீய எண்ணங்களை நீக்கி, ஒளியை உதயமாக்கும் இந்துக்களின் தீபாவளி பண்டிகையையிட்டு எனது தீபாவளி வாழ்த்தை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன்” என, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது தீபத் திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “விஷ்ணு பகவானால் நரகாசுரன் தோற்கடிக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் இந்துக்கள் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடுவதுடன், தனக்கு ஞானஔி கிட்டியது போல உலகின் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஒளிகிட்ட வேண்டுமென்று விஷ்ணு பகவானிடத்தில் நரகாசுரன் வேண்டியதாகக் கூறப்படுகிறது.

அதனை நினைவுகூரும் வகையில் அனைவரது மனங்களிலும் ஔி பிறக்க வேண்டுமென்ற பிரார்த்தனையுடனையே அனைத்து இந்துக்களும் தீபம் ஏற்றி சமய வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர்.

நாடென்ற வகையில் நாம் கடந்த இரு வருடங்களில் எதிர்கொண்ட இருளான யுகத்திலிருந்து மீண்டு, ஔி நிறைந்த பாதையில் இலங்கை தனது பயணத்தை ஆரம்பித்துள்ள இந்தத் தருணத்தில், நாட்டுக்காக வேண்டி சுபீட்சமாக நாடு மேம்பட வேண்டுமென்று பிரார்த்தனையில் ஈடுபடுங்கள். நாட்டில் சுபீட்சத்தின் தீபம் ஏற்றி, இலங்கையை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்வதற்கும் பல்லின மக்களுக்கு மத்தியில் சமாதானம், சகவாழ்வு, நித்திய நல்லிணக்கத்துடன் கூடிய ஆன்மிக வளர்ச்சியை ஏற்படுத்தவும் இந்த தீபாவளிப் பண்டிகை வரப்பிரசாதமாக அமைய வேண்டுமென்று நான் பிரார்த்திப்பதுடன், அனைவர் வாழ்விலும் இன்பமும் நலமும் உண்டாக பிரார்த்திக்கிறேன்.

இலங்கை உட்பட உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்து பக்தர்களுக்கும் ‘இருள் அகற்றி, ஒளி பிறக்க தித்திக்கும் தீபாவளி வாழ்த்துகள்’ ” என, தனது தீபத்திருநாள் வாழ்த்து தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division