சீன மக்கள் குடியரசால் இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்காக RANOMOTO வகையைச் சேர்ந்த 26 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 100 LENOVO டெஸ்க்டொப் கணினிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (10) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் ஒருங்கிணைப்புடன் பொலிஸ் மாஅதிபர் சி.டி.விக்கிரமரட்ன, இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ ஷென் ஹொங்விடம் (Qi Zhen Hong) விடுத்த வேண்டுகோளுக்கமைய, பொலிஸ் திணைக்களத்தின் பணிகளை இலகுவாக்க இவை நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆவணங்கள், இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ ஷென் ஹொங்வால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டதுடன், இந்நிகழ்வில் சீனத் தூதரக அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழு மற்றும் பொலிஸ் மாஅதிபர் சி.டி.விக்கிரமரத்ன, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் (நிர்வாகம்) நிலந்த ஜயவர்தன உட்பட பொலிஸ் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.