ஸ்ருதியை திருமணம் செய்ய விரும்பிய நாக சைதன்யா | தினகரன் வாரமஞ்சரி

ஸ்ருதியை திருமணம் செய்ய விரும்பிய நாக சைதன்யா

சமந்தாவுக்கு முன்பு ஸ்ருதி ஹாசனை திருமணம் செய்ய விரும்பினார் நாக சைதன்யா என்று தகவல் வெளியாகியிருக்கிறது. ஹைலைட்ஸ்:ஸ்ருதி ஹாசனை காதலித்த நாக சைதன்யா? சமந்தாவை பிரிந்த நாக சைதன்யாநாக  சைதன்யாவும், சமந்தாவும் காதலித்து கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம்  திருமணம் செய்து கொண்டார்கள். நான்காவது திருமண நாளுக்கு 5நாட்களுக்கு  முன்பு விவாகரத்து குறித்து அறிவித்தார்கள்.

இந்நிலையில் சமந்தாவுக்கு முன்பு ஸ்ருதி ஹாசனை காதலித்தார் நாக சைதன்யா என்றும், அவரை திருமணம் செய்ய விரும்பினார் என்றும் தகவல் வெளியாகி தீயாக பரவியிருக்கிறது.

2013ம்  ஆண்டு நாக சைதன்யாவும், ஸ்ருதியும் சந்தித்தார்களாம். முதலில் நட்பாக  இருந்த அவர்கள் பின்னர் காதலர்கள் ஆனார்களாம். பிரிக்க முடியாத அளவுக்கு  அவர்களிடையே நெருக்கம் ஏற்பட்டதாம். ஸ்ருதியை திருமணம் செய்ய  விரும்பினாராம் நாக சைதன்யா.

காதல் வலுவாக சென்று கொண்டிருந்தபோது  நாக சைதன்யா, ஸ்ருதி இடையே பிரச்சினை ஏற்பட்டு பிரிந்துவிட்டார்களாம். அதன்  பிறகே சமந்தாவை காதலித்து மணந்தார் சமந்தா என்று தெலுங்கு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

என்னது, நாக சைதன்யாவும், ஸ்ருதியும் காதலித்தார்களா, இது எப்போ நடந்தது, சொல்லவே இல்லை என்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.

கெரியரை  பொறுத்தவரை தன் தந்தை நாகர்ஜுனா, க்ரித்தி ஷெட்டியுடன் சேர்ந்து பங்கராஜு  படத்தில் நடித்திருக்கிறார் நாக சைதன்யா. அந்த படத்தில் அவரின்  கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் நேற்று வெளியானது.  நாக சைதன்யாவின் பிறந்தநாளையொட்டி அதை வெளியிட்டனர்

Comments