JAT 146 Residencies நிர்மாணப்பணிகள் தலவத்துகொடவில் ஆரம்பம் | தினகரன் வாரமஞ்சரி

JAT 146 Residencies நிர்மாணப்பணிகள் தலவத்துகொடவில் ஆரம்பம்

JAT 146 Residencies     குரூப் பிரைவட்    லிமிடெட், தனது நான்காவது வதிவிட நிர்மாணத்திட்டமான 146 JAT 146 Residencies ஐ நிர்மாணிக்கும் பணிகளை தலவத்துகொடவில் ஆரம்பித்துள்ளது. 2024மார்ச் மாதமளவில் இந்த நிர்மாணப்பணிகள் பூர்த்தியடையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், நிர்மாணப்பணிகள் ஆரம்பிப்பதற்கு முன்னதாக சுமார் 30%ஆன குடியிருப்புகள் விற்பனையாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனூடாக இந்த நிர்மாணத்திட்டம் முதலீட்டுக்கு அதிகளவு கவர்ச்சிகரமானதாக அமைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்ப டுகின்றது.

 92    பேர்ச் காணிப்பகுதியில் நிர்மாணிக்கப்படும் இந்தத் தொகுதியிலுள்ள குடிமனையொன்றின் ஆரம்ப விலை 22மில்லியன் ரூபாவாக அமைந்துள்ளது. அடுத்த 2முதல் 3வருட காலப்பகுதியில் 146 Residencies ஊடாக 25 - 35%மூலதன வருமதியை ஈட்டக்கூடியதாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், வருடாந்தம் வாடகை வருமதிகள் 7%வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

JAT Property  குரூப் பிரைவட் லிமிடெட் பணிப்பாளர்  ரிச்சர்ட் குணவர்தன     கருத்துத் தெரிவிக்கையில்,      இலங்கை சந்தையில் எமது நான்காவது ரியல்எஸ்டேட் அபிவிருத்தித்திட்டமான 146 Residencies ஐ அறிமுகம் செய்வதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். நிர்மாணத்திட்டத்தில் அடங்கியுள்ள 112 அலகுகளும் கவனமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன்,                  அதிகளவு வினைத்திறன், அழகியல் அம்சங்கள் மற்றும் அலங்காரம் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையிலுள்ளது என்றார்.

Comments